பிறந்தநாள் வாழ்த்து

பெயர் :மயூரன் தேவராஜா

நாள் :21-04-2015. Happy Birth Day,

இன்று தனது பிறந்தநாளை சுவிஸ்சில் உள்ள தனதில்லத்தில் கொண்டாடும் மயூரனை அம்மா அப்பா ,அக்காமார்கள்.உசானந்தினி.ஷோபனந்தினி.விஜெந்தினி அத்தான்மார்களான, புஸ்ப்பானந்,தர்ஷன்,மருமக்கள் சக்தி, தன்வியா.மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் மயூரனை நீடூழி வாழ வேண்டுமென்று வர்ல்ட்தமில்ஸ்வின் இணையமும் வாழ்த்துகின்றது அன்பார்ந்த பண்பான நல் உள்ளம் கொண்ட நண்பர்கள் மயூரனை வாழ்த்துங்கள், எந்த ஒரு மனிதனும் மற்றவரை வாழ்த்தும் போது உளமார மனமார நீடூழி வாழ என வாழ்த்துவதனால் வாழ்த்தப் படுபவரது மனமும் உள்ளமும் சந்தோசப்படும் இன்றயநாளின் விசேடங்கள் 1. அட்ச்ஸயதிருதிகை, 2.குசேலன் குபேரனான தினம் அட்சய திரிதியை சிறப்பு, 3.அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான். 4.வியாச மஹரிஷி சொல்லச் சொல்ல பிள்ளையார் மஹாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்த . நாளில்தான். 5.குபேரன், மஹாலட்சுமியைத் துதித்து என்றும் வற்றாத செல்வம் நிறைந்த சங்க நிதியையும், பதும நிதியையும் பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான். 6.புண்ணிய நதியான கங்கை நதி வானத்திலிருந்து பாரத மண்ணுக்கு வந்ததும் இந்த நாளில்தான் 7,ஏப்ரல் 21: பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் 9.கிமு 753 - ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர். 10.கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனிமீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான். 11.1509 - ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 12.1526 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான். 13,1822 - இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள். 15,1863 - கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ரித்வான் முதல் நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. 16,1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர். 17,1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 18.1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர். 19.1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது. 20.1967 - கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார். 21,1975 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார். 22,1984 - ஆங்கில பாப் இசை உலகில் தொடர்ந்து 37 வாரங்கள் முதல் நிலையில் இருந்து சாதனை படைத்த ஒரு படைப்பு Michal Jackson -ன் Thriller. 23,1989 - பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர். 24,1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார். 25,2000- ஆணையிரவு இராணுவத் தளத்தைப் புலிகள் கைப்பற்றுதல் 26,ஏப்ரல் 21ரோம் நகரம் உருவாக்கப்பட்ட தினம்!!! உலகில் அழகு என்ற சொல்லுக்கு ரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே, இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும் என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும்.