மரண அறிவித்தல்,
திருமதி நாகரெத்தினம் வேணுகா
மலர்வு : மண்ணில் : 20 மே 1977 — உதிர்வு : விண்ணில் : 5 ஒக்ரோபர் 2013

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகரெத்தினம் வேணுகா அவர்கள் 05-10-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், நாகரெத்தினம்(முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர்), காலஞ்சென்ற பங்கேஸ்வரி நாகரெத்தினம்(பிரதி அதிபர், மட்/வின்செட் மகளிர் உயர்தரப் பாடசாலை) தம்பதிகளின் அன்பு மகளும், பரமேஸ்வரன், திலகவதி, கெங்கேஸ்வரி, கனகம்மா, அரசம்மா, காலஞ்சென்ற நடராசா, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மருமகளும், நரேந்திரகுமார்(பொதுச்சுகாதாரப் பரிசோதகர்- செல்வா நகர்), தரணிகா(உதவிக் கணக்காளர், சேவா லங்கா -மட்டக்களப்பு), Dr.கரிகாலன்(வைத்தியர்- கண்டி போதனா வைத்தியசாலை), கிருஷ்ணபிரியன்(மாவட்ட புள்ளிவிபரவியல் அலுவலகம் -மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்பழகன், கோகுலவதனி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், சரஸ்வதி, செல்வத்துரை, கோவிந்தசாமி, நவரெத்தினம், காலஞ்சென்ற அழகரெத்தினம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும், துஜேன், லக்‌ஷயா ஆகியோரின் பெரிய தாயும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடுப்பத்தினர் தொடர்புகளுக்கு - — இலங்கை தொலைபேசி: +94652226511

தகவல்
06.10.2013.
தொடர்புகளுக்கு
இலங்கை தொலைபேசி: +94652226511
தொலைபேசி: இலங்கை தொலைபேசி: +94652226511