மரண அறிவித்தல்.
இளையதம்பி சிவானந்தராஜா.
மலர்வு : 28-10-1950. — உதிர்வு : 21-10-2016.

பாண்டிருப்பு சிவானந்தராஜா ஆச்சாரியாரின் பூதவுடலுக்கு  இறுதியஞ்சலி,
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்கு உறவுப் பாலமாக அமைந்த அமரர் இளையதம்பி சிவானந்தராஜா ஆச்சாரியாரின் பூதவுடலுக்கு பல்துறை சார்ந்தோரால் இறுதியஞ்சலி.

 

தமிழ்த் தேசியத்தில் ஆர்வங் கொண்டவரும் நகைகள் வடிவமைப்பததில் தேர்ச்சி பெற்றவருமான அமரர் இளையதம்பி சிவானந்தராஜாவின் பூதவுடருக்கு பல்துறை சார்ந்தோரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இறுதியஞ்சலி செலுத்தப்பட்ட பின்பு பாண்டிருப்பு இந்து மைதானத்தில் அன்னாரது புதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

கடந்த வெள்ளிக்கிழமை (21) முதல் பாண்டிருப்பு 2 ஆம் குறிச்சியில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டடிருந்த அமரரின் புதவுடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மா. நடராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி. சேயோண், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேசக் கிளையின் உப செயலாளர் எஸ். மனோகரன், மட்டக்களப்பு மற்றும் கல்முனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், ஊடகவியலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

 

பாண்டிருப்பை அண்டிய முஸ்லிம் பிரதேசங்களான மருதமுனை, கல்முனை மற்றும் சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களிலிருந்து வந்த இஸ்லாமிய சகோதரர்கள் அவரது உடலத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து வந்த பாண்டிருப்பு 2 ஆம் குறிச்சியைச் சேர்ந்து அமரர் வேல்முருகு மாஸ்டர் கடந்த 1990 காலப்பகுதியில் கல்முனைப் பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார் அவருடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வளர்ச்சிக்காகக தன்னை அர்ப்பணித்தவர்.

 

அமரர் சிவானந்தராஜா ஆச்சாரியார் கடந்த 1999 காலப் பகுதியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிசறையில் சுமார் ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்பு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்
22-10-2016
தொடர்புகளுக்கு
பாண்டிருப்பு
தொலைபேசி:பாண்டிருப்பு