மரண அறிவித்தல்
அமரர் திரு. சீனித்தம்பி பரசுராமன்
மலர்வு : 10.03.1920 — உதிர்வு : 26.08.2014

மரண அறிவித்தல் - அமரர் திரு. சீனித்தம்பி பரசுராமன் - ( ஓந்தாச்சிமடம் முன்னாள் கிராமோதயசபை, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், ம. தெ. எ. பற்று கிராம சபை உறுப்பினரும் மற்றும் ம. தெ.எ. பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளை முகாமையாளருமாவார் ) அன்னார் அமரர்களான சீனித்தம்பி- மாரிமுத்து தம்பதிகளின் செல்வப் புதல்வனும் மற்றும் திருமஞ்சணம் அவர்களின் பாசமிகு கணவரும் காலஞ்சென்றவர்களான பூபதிப்பிள்ளை, சாமித்தம்பி, மற்றும் நல்லையா, காசிநாதன், மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும் அமரர்களான இளையதம்பி- சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் புவனகேசரி, ஆனந்தராசா, சபாரெட்ணம், நமசிவாயம், துரைசிங்கம் ( சுவிஸ்) கேசகலட்சுமி, ரதி, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும் நடராசா, கோபாலபிள்ளை, பிரபாகர் ( நீர்ப்பாசனத் திணைக்களம்) சோதிமணி, காலஞ்சென்ற பத்மாவதி, மற்றும் அரியமலர், கோமதி, ரஞ்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கலைச்செல்வி, டினேஸ், டினோஜன், கோபிகா, திவ்வியா, ஷஜிந்தா, சுலோஜிகா, சுலோமிகா, சுலோஜன், மிஷாந்த், ரதுமிதன், சுஜீவன், சுஜிர்தா, சுஜீஸ், சுஜிக்கா, சிந்துகா, சிந்துஷ்யன், சுரோமிகா, சிநேகா, துஷிகிருஷ்ணா, துர்ஜா மற்றும் தனோஜ் ஆகியோரின் பாட்டனாருமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் வியாழக்கிழமை ( 28.08.2014) பி.ப. 3.00 மணியளவில் மட்டக்களப்பு இல: 58/8, புனித செபஸ்தியார் வீதியிலுள்ள இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக பூதவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்தச் செல்லப்படும் இவ்அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். -

தகவல்
26.08.2014
தொடர்புகளுக்கு
தகவல் - குடும்பத்தினர் தொடர்பு - 0094(0)652223379 -
தொலைபேசி:தகவல் - குடும்பத்தினர் தொடர்பு - 0094(0)652223379 -