கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு,
 • கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு,

  தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியம் இன்று கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம்பெற்றது.

  இரணைமடுவெனும் பெருங்குளமும் ஏனைய ஏராளம் குளங்களும் வான்சொரியும் வாங்கி வல்ல விவசாயப் பெருமக்களின் வாழ்வில் உரம் சேர்த்து வரப்புயரவும் நீருயரவும் நெல்லுயரவும் எனும் பொன்மொழிக்கிணங்க,

  வயல்களின் கொடையாய் விளையும் நெல்லை அரிவிவெட்டி முதன்முதல் விவசாய பெருமக்கள் இறைவனுக்கு இட்டு வணங்கி உண்ணும் நிகழ்வாய் தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியும் இன்றும் கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம்பெற்றது.

  வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண பண்பாட்டுத் திணைக்களம் கிளிநொச்சி மாவட்ட கலாச்சாரவையோடு இணைந்து கிளிநொச்சியின் விவசாய பெருமக்களை ஒன்று கூட்டி இன்று இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வை பண்பாட்டு கலை நிகழ்வுகளோடு சேர்த்து நிகழ்த்தியது.

  இந்த நிகழ்வு பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி.உசா சுபலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

  இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், கலைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

  வரவேற்புரையை யாழ் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.சு.விஜயரத்தினம் வழங்கினார்.

  கலை நிகழ்வுகளாக கிளி இராமநாதபுரம் மகா வித்தியாலய மாணவர்களின் அம்மன் நடனம், இராமநாதபுரம் மேற்கு அ.த.க. பாடசாலை மாணவர்களின் கிராமிய நடனம், கிளிநொச்சி மகா தேவா ஆச்சிரம கவின் கலை மன்றத்தின் உழவர் நடனம், வடக்கு மாகாண முன்னணி கலைஞர்கள் வழங்கிய தைமகள் மலருகிறாள் இசை நிகழ்வு என்பனவும் இடம்பெற்றன.

  நன்றியுரையை கிளிநொச்சி கலாச்சார உத்தியோகத்தர் அருள்சந்திரன் வழங்கினார்.

   பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,

  தமிழர் வாழ்வில் மங்கா புகழும் பொருளும் பொதிந்த தைத்திருநாளும் புதிர்எடுத்தல் நிகழ்வும் எங்கள் வாழ்வோடு இன்றும் மிகுந்த சிறப்பாக பின்பற்றப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

  போர் நடந்த காலத்திலும் இந்த நிலத்தில் களத்திலும் வயலிலும் எமது பண்பாட்டை பேணிய மாண்புமிகு மைந்தர்களின் தடங்கள் பதிந்த மண்ணில் இத்தகைய பண்பாட்டு அம்சங்கள் என்றும் அழியாதிருக்க நாம் எல்லோரும் இனத்துக்காக இயங்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

  நமது பண்பாட்டு நாட்களில் சொல்லக்கூடிய வரலாறுகளை கலைகளுடாகவும் உரைகளுடாகவும் சொல்லிவிட நிறைந்த வழிகள் திறக்கப்டுகின்றன.

  வயல் வாழ்வோடு இணைந்தது.இயற்கையோடு இணைந்த வாழ்வின் எச்சமாய் இருப்பது இந்த வயல்காடுகள்தான் ஆக்கிரமிப்பாளனின் மிதிப்பிலும் வரட்சியிலும் எங்கள் வயல்கள் துவண்போதும் துவளாத எங்கள் விவசாய பெருமக்களின் மனமும் உழைப்பும் வியர்வையும் இந்த நெல் மணிகளாக எங்கள் வாழ்வில் நம்பிக்கையூட்டுகின்றது.

  இந்த புதிரெடுத்தல் நிகழ்வில் பங்காளர்களாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

   

  கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
விளையாட்டு செய்தி
மருத்துவம்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort