ஆடைகள் வடிவமைப்பு தொழில்
  • ஆடைகள் வடிவமைப்பு தொழில்

    ஆடைகள் வடிவமைப்பு தொழில்,,,ஒரு மனிதன் அணிந்துள்ள உடையின் அடிப்படையிலே சமுதாயத்தில் அவனது மதிப்பும் மரியாதையும் அளவிடப்படுகிறது. என​வே உ​டைகள் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றிய​மையாத ஒன்றாகும். இத்த​கைய இன்றிய​மையா ஆ​டைக​ளை வடிவ​மைப்பது என்பது ஒரு க​லையாகும். நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய டிசைன்களை உருவாக்குவது ஆடைகள் வடிவமைப்புத் தொழிலின் முக்கிய அம்சமாகும். ஏ​னெனில், ஒரே டிசைனில் அமைந்த ஆடைகளை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் அணிய மக்கள் விரும்புவதில்லை. எனவே புதிய டிசைன்களில் ஆடைகளை அவ்வப்போது வடிவமைத்து உலக அளவில் மக்களிடம் ​கொண்டு ​செல்வதன் மூலம் ஆ​டை வடிவ​மைப்புத் ​தொழிலில் சிறந்து விளங்க முடியும். துணிகளை வடிவமைத்தல், எம்பிராய்டரி போடுதல், தைத்தல், பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிற்குள்ளும் துணிகளை அனுப்புதல் போன்ற பணிகளில் பலர் ஈடுபடுவதால் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்குவதுடன், பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழிலாகவும் இத்​தொழில் திகழ்கிறது.

    இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தொழில்களில் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, கவர்ச்சியான வகையில் ஆடைகளை வடிவமைப்பதே ஆடைகள் வடிவமைப்புத் தொழிலாகும். மற்ற தொழில்களை காட்டிலும் ஆடைகள் வடிவமைப்புத் தொழில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆடைகள் வடிவமைப்புத் தொழிலானது காலத்திற்கு ஏற்றவாறும் நாகரீகம் வளர வளர மாறும் தன்மையைக் கொண்டது. ஆடைகள் வடிவமைப்புத் தொழிலுக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் செல்வந்தர்களே, பணம் படைத்த செல்வந்தர்கள் சாதாரண குடிமக்களை விட தங்களை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காகவும், வகைவகையான கண்ணைக்கவரும் வகையில் ஆடைகளை அணிந்து மற்றவர்களை கவரேவ்ணடுமெனவும் விரும்புவர். இதுவே ஆடைகள் வடிவமைக்க முக்கிய காரணமாக உருவெடுத்தது. மனித இனத்திற்கு தேவைப்படும் உணவு, உடை, இருக்கையில் உடையானது முக்கிய இடத்தை வகிக்கிறது.

    மிக உயர்நத விலையுள்ள துணிகளைக் கொண்டு சரியான அளவுடன் தரமான தொழில்நுட்ப பணியாளர்களால் செல்வந்தருக்கென ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய ஆடைகள் மிக குறைவான எண்ணிக்கையில்தான் தயாரிக்கப்படுகிறது. பொதுவான அளவை அடிப்படையாகக் கெர்ணடு சாதாரணமான விலையுள்ள துணிகளை கெர்ணடு மிக அதிக அளவில் சாதாரண அல்லது நடுத்தர மக்கள் அணியும் ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் வடிவமைப்பு தொழிலில் ஆடைகள் மட்டுமின்றி வீட்டிற்கு தேவைப்படும் அலங்காரப்பொருட்கள், படுக்கை அறை, சமையல் கூடத்திற்கு தேவைப்படும் பொருட்களும் அடங்கும். தற்போது இந்தியாவில் ஆயத்த ஆடைகள் மற்றும் அதன் தொடர்பான இதர பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20,000 ஆகும். இவற்றில் 300 தொழிற்சாலைகள் மிகப்பெரிய அளவில் ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும்.

    இந்திய ஆடைகள் வடிவமைப்புத் தொழில் வருங்காலத்தில் 10 முதல் 15 சதவீத வளர்ச்சி அடையுமென இத்தொழில் தொடர்பான வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ஆடைகளுக்கு உலக அளவில் தற்போது அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவில் இத்தகைய ஆடைகளின் தயாரிப்பு மட்டும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 300 பில்லியன்களாக இருக்கும் எனவும் இதன் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆடைகள் வடிவமைப்பு தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மேன்மேலும் வளர்ச்சி அடைவதற்கும்,வளர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்கவும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே புதிய டிசைன்களில் ஆடைகளை அவ்வப்போது வடிவமைத்து உலக அளவில் அதிக அளவில் விற்பனை செய்யும் நாடுகளை விட இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆடைகளை வடிவமைப்பது ஒரு நுட்பமான பணியாகும். போதிய பயிற்சி அனுபவம் இல்லாதோர் இத்தொழிலில் ஈடுபட இயலாது. இதற்கென முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து, பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட முடியும். மக்களால் விரும்பி அணியும் ஆடைகளை வடிவமைக்கும் அனுபவம் மிக்க தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இன்று உலக அளவில் அதிக வரவேற்பு உள்ளது. என​வே ​போதிய பயிற்சியுடன் இத்​தொழில் ​தொடங்கப்பட்டால் மிகப்​பெரிய ​வெற்றி வாய்ப்பு நிச்சயம்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
இந்தியச் செய்திகள்
தொழில் நுட்பம்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink