உடைகளை வடிவமைப்பதே தையற்கலை
• உடைகளை வடிவமைப்பதே தையற்கலை

டலமைப்பிற்குத் தகுந்தபடி உடைகளை வடிவமைப்பதே தையற்கலை. உடையின் பொருத்தம் என்பது உடம்பின் தன்மையுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. எனவே உடற்கூறு இலக்கணம் என்கிற உடல்புறத் தோற்றவியலைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

ருவ அமைப்புகள்
உடலமைப்பின் புறத்தோற்றமானது ஒவ்வொருடைய உடலமைப்பிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உயரம், மார்புச் சுற்றளவு, இடுப்புச் சுற்றளவு, புட்டச் சுற்றளவு எனும் இம்மூன்றின் அளவுகளின் தன்மையில் காணப்படும்.

பெண்களைப் பொறுத்தளவில் மார்பக அளவுகளில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. பொதுவாக 5' 4" இருக்கும் உயரமான ஒரு பெண்ணின் மார்பு - 34", இடுப்பு - 28", புட்டச் சுற்றளவு - 36" என்பதே விகிதச் சம உருவத் தன்மையாகும்.

இதை நிலையான உருவம் என்று கூறலாம். இந்த உருவத்தின். விகிதச் சமமின்மை என்பது மார்பு, இடுப்பு, புட்டம் சுற்றளவுகளின் தன்மையானது மேற்குறிப்பிட்டுள்ள விகித சம அளவிற்கு மாறுபட்டு இருக்கும். சற்று தடிமனான உருவத்தில் மார்பு அளவு 34", இடுப்பு 30", புட்டம் 39" என்றிருக்கும். ஒல்லியான உருவத்தில் மார்பு 34", இடுப்பு 26", புட்டம் 34" என்றிருக்கும். மிகவும் சதைப்பற்றுள்ள உருவத்தில் மார்பு 38", இடுப்பு 34", புட்டம் 44" என்றுமிருக்கும்.

பொதுவாக எலும்பு மண்டலத்தின் மேற்புறமாகப் போர்த்திய வடிவில் அமையப்பட்டிருக்கும் தசை நார்களின் தோற்றத்தினால்தான் உருவ அமைப்புகளின் தன்மைகளானது நிர்ணயிக்கப்படுகிறது. நிலையான உருவம் என்பதும், விகித சம உருவம் என்பதும் எடுத்துக்காட்டான உருவம் என்பதும் ஒரே உருவம் ஆகும். இத்துடன் சேர்த்து ஒல்லியான உருவம், தடிமனான உருவம், கொழுத்த சரீரமுடைய உருவம் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

பெண்களின் புறத்தோற்ற அமைப்பு என்பது அவர்களுடைய பாரம்பரியத்தினைச் சார்ந்து அமையலாம் அல்லது அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் அமையலாம்.

உடலில் சதைப்பற்று மிகுதியான பகுதிகளாக மார்பு, இடுப்பு, புட்டம், தொடை பாகங்களில் ஏற்படும் தசை நார்களின் தன்மையும், கொழுப்புச் சத்து மிகுதியாலும் உடல் தோற்றம் பருமனாக இருக்கிறது. சீரான உடல்வாகு பெற தினமும் உடற்பயிற்சி மேற்கோள்வது அவசியம்.

பக்கவாட்டுத் தோற்றம்

ஒருவர் நிற்கும் நிலையில், பக்கவாட்டுத் தோற்றத்தினைக் கவனிக்கும் போது நிலையான உருவம், நிமிர்ந்த உருவம், முன் நோக்கி வளைந்த உருவம், கூன் முதுகு அமைப்பு உருவம், அகன்ற தோள்பட்டையுடன் கூடிய குறுகலான மார்பக அமைப்பு கொண்ட உருவம், குறுகிய தோள்பட்டையுடன் கூடிய அகன்ற மார்பக அமைப்பு கொண்ட உருவம் போன்ற உருவ அமைப்புகளைக் காண முடிகிறது.

தோள்பாக அமைப்பு நிலையானதாக அமைந்திருக்கும். சில உருவத்தில் முன் நோக்கி வளைந்த தோள்பட்டை, உயர்ந்த தோள்பட்டை, சரிந்த தோள்பட்டை போன்ற அமைப்புகளுக்குத் தகுந்தாற் போல உடையின் தோள் பாகத்தில் சாய்வு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் உடலின் தன்மைக்குப் பொருந்தக் கூடிய உடைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கால்களின் அமைப்பு

கால்களின் அமைப்புகளில் நிலையான கால்கள் அமைப்பு, அகன்ற கால்களின் அமைப்பு, தொடைச் சதைப்பற்று அதிகமான கால்களின் அமைப்பு என்பவை காற்சட்டைகளுக்கான அளவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

புறத் தோற்றம்

உடலை அதன் புறத்தோற்ற அமைப்பைக் கொண்டு நான்கு விதமாகப் பிரிக்கலாம். அவை

1. ஆப்பிள் வடிவம்

2. செவ்வக வடிவம்

3. மணி வடிவம்

4. பகுக்கப்படாத வடிவம்

உருவம் என்பதைப் பார்க்கும் போது 36"-29"-38" என்று முறையே மார்பு - இடுப்பு - புட்டம் அளவுகள் இருப்பதே சரியான உருவம் என்று ஒரு புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கிறது.

எட்டு தலைக் கொள்கை

உடலின் அமைப்பில் பருவ வயதினை அடைந்த பெண்ணின் முழு உயரத்தில் தலை முதல் கால் பாதம் வரையில் எட்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1. தலை முதல் முகவாய்க்கட்டு வரை

2. முகவாய்க்கட்டு முதல் நடு மார்பு வரை

3. நடு மார்பு முதல் இடுப்பு வரை

4. இடுப்பு முதல் புட்டம் வரை

5. புட்டம் முதல் தொடை நடுப்பாகம் வரை

6. தொடை நடுப்பாகம் முதல் கால் முட்டி வரை

7. கால் முட்டி முதல் கெண்டைக்கால் வரை

8. கெண்டைக்கால் முதல் காலின் பாதம் வரை

இவை தையல் தொழில்நுட்பத்தில் உடலின் எட்டு தலைக் கொள்கைகள் என்று சொல்லப்படுகின்றன.

எட்டு தலைக் கொள்கையின் பயன்

இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் உடைகளுக்கான உயர அளவுகள் கணக்கிடப்படுகிறது. பருவப் பெண்ணின் முழு உயரம் 5 அடி 4 அங்குலம் (5' 4"). இதை எட்டால் வகுத்தால் ஒரு பிரிவு என்பது 8 அங்குலம். அதாவது

5 அடி 4 அங்குலம் = 5' 4" x 12 =60"+4" = 64"

இதை எட்டால் வகுத்தால் 64"/8 = 8"

இது ஒரு தலைக் கொள்கையாகும். இந்த கணக்கீட்டின் அடிப்படையில்தான் உடைகளுக்கான நீள அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

சில உடைகளுக்கான நீள அளவுகள்

இந்த எட்டுதலைக் கொள்கையின் அடிப்படையில் சில நீள அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

மேல் சட்டை உடை

ரவிக்கை, ப்ளவுஸ், கட் - ஜாக்கெட், சோளி முதலியவற்றுக்கு 1 3/4 (1.75அளவு) தலைக் கொள்கை அளவு முழு நீள அளவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி

1.75 x 8" =14" அதாவது 14 அங்குலம். இதுவே மேல் சட்டையின் முழு நீளமாகும்.

முழு இரவு நேர உடை

முழு நைட்டி எனப்படும் முழு இரவு நேர உடைக்கு 7 1/2 (7.5 அளவு) தலைக் கொள்கை அளவு கடைப்பிடிக்கப்படுகிறது.

7.5 x 8" = 60" . அதாவது 60 அங்குலம். இதுவே முழு இரவு நேர உடையின் முழு நீளமாகும்.

மேல் உள்ளாடை

சுமீஸ் / டாப்ஸ் எனும் உடையான மேல் உள்ளாடைக்கு மூன்று விதமான அளவுகள் க்டைப்பிடிக்கப்படுகிறது.

கூடுதல் உயரம்- 5 தலைக் கொள்கை

5 x 8" = 40". அதாவது 40 அங்குலம். முழுநீள அளவாகும்.

நடுத்தரமான உயரம்- 4 1/2 (4.5அளவு) தலைக் கொள்கை

4.5 x 8" = 36". அதாவது 36 அங்குலம். முழுநீள அளவாகும்.

கூடுதல் உயரம்- 4 தலைக் கொள்கை

4 x 8" = 32". அதாவது 32 அங்குலம். முழுநீள அளவாகும்.

சுடிதார் பாட்டம் உடை

சுடிதார் பாட்டம் உடைக்கு 5 தலைக் கொள்கையாகக் கணக்கிடப்படுகிறது.

5 x 8" = 40". அதாவது 40 அங்குலம். முழுநீள அளவாகும்.

பைஜாமா, சல்வார், பாட்டியாலா பைஜாமா, டோத்தி சல்வார், பேண்ட், முழுக்கால் சட்டை போன்றவற்றிற்கும் இந்த அளவே பொருத்தமானதாக இருக்கிறது.

பிற உடைகள்

சிலாக் உடைகளுக்கு 3 1/2 (3.5 அளவு) தலைக் கொள்கை

3.5 x 8" = 28". அதாவது 28 அங்குலம். முழுநீள அளவாகும்.

சட்டை உடைகளுக்கு 3 3/4 (3.75 அளவு) தலைக் கொள்கை

3.75 x 8" = 30". அதாவது 30 அங்குலம். முழுநீள அளவாகும்.

ஆய்வக மேலாடை (லேப் கோட்) உடைகளுக்கு 4 தலைக் கொள்கை

4 x 8" = 32". அதாவது 32 அங்குலம். முழுநீள அளவாகும்.

அரைக்கால் சட்டை 1 3/4 (1.75) தலைக் கொள்கை

1.75 x 8" = 14" . அதாவது 14 அங்குலம். முழு நீள அளவாகும்.

பெர்முடாஸ் எனப்படும் காலின் முட்டிப் பாகம் வரை ஆடைக்கு  1/4 (2.25 அளவு) தலைக் கொள்கை

2.25 x 8" = 18". அதாவது 18 அங்குலம். முழு நீள அளவாகும்.

தையல் கலையில் இது போன்ற கணிதப் பங்கீடுகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

அளவீட்டு முறைகள்

உடைகளுக்கு நேரடியாக அளவெடுக்கும் போது இரண்டு வகையான அளவு முறைகள் பின்பற்றப்படுகிறது.

1. பிரிட்டிஷ் அளவு முறை

2. மெட்ரிக் அளவு முறை

பிரிட்டிஷ் அளவு முறையில் அங்குலம் அளவாகக் கணக்கெடுக்கப்படுகிறது.

அதாவது ஒரு அங்குலம் (Inch) எட்டு சம அளவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. எட்டில் ஒரு பங்கு= 1/8 "

2. எட்டில் இரு பங்கு= 2/8 " அல்லது 1/4 "

3. எட்டில் மூன்று பங்கு= 3/8 "

4. எட்டில் நான்கு பங்கு= 4/8 " அல்லது 1/2 "

5. எட்டில் ஐந்து பங்கு= 5/8 "

6. எட்டில் ஆறு பங்கு= 6/8 " அல்லது 3/4 "

7. எட்டில் ஏழு பங்கு= 7/8 "

8. எட்டில் எட்டு பங்கு= 8/8" அதாவது 1"

இந்த பிரிட்டிஷ் அளவு முறையில்

12 அங்குலம் சேர்ந்தது ஒரு அடி (feet)

36 அங்குலம் சேர்ந்தது ஒரு யார் (கெஜம்)

என்பதான அளவுகளாக இருக்கிறது.

மெட்ரிக் அளவு முறை

மெட்ரிக் அளவு முறையில் சென்டி மீட்டர் அளவாகக் கணக்கிடப்படுகிறது.

இந்த முறையில் ஒரு சென்டி மீட்டர் பத்து சம அளவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த பத்து சம அளவு ஒவ்வொன்றும் மில்லி மீட்டர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெட்ரிக் அளவு முறையில்

10 மில்லி மீட்டர் சேர்ந்தது 1 சென்டி மீட்டர்

100 சென்டி மீட்டர் சேர்ந்தது 1 மீட்டர்

100 மீட்டர் சேர்ந்தது 1 கிலோ மீட்டர்

என்பதான அளவுகளாக இருக்கிறது.

அளவு மாற்றம்

தற்போது மெட்ரிக் முறை அளவுகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பிரிட்டிஷ் அளவு முறையிலிருந்து மெட்ரிக் முறைக்கு மாற்றம் செய்ய கீழ்காணும் கணக்கு பயன்படுத்தப்படுகிறது.

1 அங்குலம் = 2.54 செ.மீ

1 அடி = 30.5 செ.மீ

1 கெஜம் = 91 செ.மீ

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்ததால் பிரிட்டிஷ் அளவு முறை பயன்படுத்தப்பட்டு வந்ததால் பிரிட்டிஷ் முறை இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடைகளுக்கு அளவெடுக்கப் பயன்படுத்தப்படும் அளவு நாடாவின் ஒரு புறம் பிரிட்டிஷ் அளவு முறையும் மறு புறம் மெட்ரிக் அளவு முறையும் கொண்டதாகவே கிடைக்கிறது. பிற நாடுகளில் மெட்ரிக் அளவு முறை பயன்பாட்டில் இருக்கின்றன.

இன்றைய நிலையில் இந்தியாவில், உடை தயாரிக்கும் கல்வி கற்பவர்கள் மற்றும் கற்றவர்கள் மெட்ரிக் அளவு முறையும், தையலை அனுபவப் பூர்வமாகக் கற்றுக் கொண்டவர்கள் பிரிட்டிஷ் அளவு முறையையும் பயன்படுத்துகின்றனர். ஏற்றுமதி உடை தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டு அளவு முறைகளுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு அளவு முறைகளையும் தெரிந்து கொள்வது நல்லதாக இருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட அளவு மாற்ற முறைகளைக் கொண்டு, அளவுப் பங்கீட்டு முறையைப் பயன்படுத்தி உடைகளைத் தயாரிக்கலாம். உடைகள் தயாரிப்பில் ஓரளவு அனுபவம் பெறுவதற்கு முன்பு தாள்களில் (Paper) பயிற்சி செய்து பார்த்து, அதன் பின் துணிகளில் துவங்கலாம்.

• பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
தொழில் நுட்பம்
விவசாயத் தகவல்கள்
உலக செய்தி
மரண அறித்தல்