கிரகங்களும் உச்ச நீச்ச வீடுகளும்,
 • கிரகங்களும் உச்ச நீச்ச வீடுகளும்,

  கிரகங்களும் உச்ச நீச்ச வீடுகளும்...ஒரு கிரகத்தின் உச்ச வீட்டில் இருந்து ஏழாவது வீடு அந்த கிரகத்துக்கு நீச்ச வீடு..உதாரணத்திற்கு சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார்..மேஷத்தில் இருந்து ஏழாவது வீடு துலாம் , அங்கு சூரியன் நீச்சம் பெறுகிறார்..

  சூரியன் - மேஷத்தில் உச்சம் - துலாமில் நீச்சம்
  சந்திரன்- ரிஷபத்தில் உச்சம் - விருச்சிகத்தில் நீச்சம்
  செவ்வாய் - மகரத்தில் உச்சம் - கடகத்தில் நீச்சம்
  புதன் - கன்னியில் உச்சம் - மீனத்தில் நீச்சம்
  குரு - கடகத்தில் உச்சம் - மகரத்தில் நீச்சம்
  சுக்கிரன் - மீனத்தில் உச்சம் - கன்னியில் நீச்சம்
  சனி - துலாமில் உச்சம் - மேஷத்தில் நீச்சம்

  குறிப்பு :

  ஒரு கிரகத்தின் உச்ச வீட்டில் இருந்து ஏழாவது வீடு அந்த கிரகத்துக்கு நீச்ச வீடு..உதாரணத்திற்கு சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகிறார்..மேஷத்தில் இருந்து ஏழாவது வீடு துலாம் , அங்கு சூரியன் நீச்சம் பெறுகிறார்..

  ராகு கேதுவிற்கு உச்ச வீடு நீச்ச வீடு என்று எதுவும் இல்லை..சிலர் கூறுவார் ராகுவிற்கு ரிஷபம் உச்ச வீடு - விருச்சிகம் நீச்ச வீடு , கேதுவிற்கு விருச்சிகம் உச்ச வீடு - ரிஷபம் நீச்ச வீடு என்று..ஆனால் புராண ஜோதிட நூல்களில் அதற்க்கான ஆதாரம் இல்லை..எனவே தான் வாரத்தில் ஏழு நாட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டு ராகு கேதுவிற்கு தனியாக நாட்கள் இல்லை..

  விம்சோத்தரி தசையில் கிரகங்களின் பங்கு

  விம்சோத்தரி தசை என்பது சந்திரன் இராசி சக்கரத்தில் நின்ற பாகையை வைத்து கணக்கிடப்படுவதாகும்.எனவே சந்திரனை மையமாக வைத்தே கிரகங்களின் தசைக்காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என்னுடைய யூகமாகும். ஊகத்தின் அடிப்படையில் கிரகங்களின் தசை காலத்தைஒ கணக்கிட்டிருக்கிறேன். இதுதான் அடிப்படை காரணம் எனக் கூற விரும்பவில்லை.
  விம்சோத்தரி தசையின் மொத்த காலமான 120 வருடங்களை 9 கிரகங்களுக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது எனப் பார்ப்போம். சந்திரன் நின்ற பாகையை வைத்து தசை கணக்கிடப்படுவதால், சந்திரனின் ஆட்சி வீடான கடகம்,உச்ச வீடான ரிசபம்,இந்த இரண்டு வீடுகளையும் மையமாகக்கொண்டு,மற்ற கிரகங்களின் ஆட்சி,உச்ச வீடுகள் வரை கணக்கிட்டு, தசைக்காலத்தை நிர்ணயிக்கும் முறையப் பார்ப்போம்.

  கேது தசை – 7 வருடங்கள்
  கேதுவுக்கு ஆட்சி,உச்ச வீடு விருச்சிகம், நீச்ச வீடு ரிசபம்.
  கேதுவினுடைய ஆட்சி,உச்ச வீடான விருச்சிகத்தில், சந்திரன் நீச்சம் பெறுகிறான். கேதுவினுடைய நீச்ச வீடான ரிசபத்தில் சந்திரன் உச்சம் பெறுகிறான். எனவே கேதுவை பொறுத்தவரை சந்திரனுக்கு அதன் உச்ச வீடான ரிசபமே வலிமையான வீடாகும். கேதுவினுடைய ஆட்சி வீட்டில் சந்திரன் நீச்சமடைவதால் சந்திரனுடைய ஆட்சி வீட்டிற்கு பலமில்லை. எனவே சந்திரனுடைய உச்ச வீடான ரிசபம் முதல் கேதுவின் ஆட்சி உச்ச வீடான விருச்சிகம் வரை கணக்கிட 7 வருகிறது. எனவே கேது தசையில் அளவு 7 வருடங்களாகும்.

  சுக்கிர தசை – 20 வருடங்கள்
  சுக்கிரனுக்கு ஆட்சி வீடுகள் ரிசபம்,துலாம்,உச்ச வீடு மீனம்,நீச்ச வீடு கன்னி.
  சுக்கிரனுடைய ஆட்சி வீடான ரிசபத்தில் சந்திரன் உச்சமடைகிறான்.சுக்கிரன் உச்சமடையும் மீன ராசிக்குரிய குரு, சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் உச்சமடைகிறான்.எனவே சுக்கிரனை பொறுத்தவரை சந்திரனுக்கு அதன் ஆட்சி,உச்ச வீடுகள் இரண்டுமே வலிமையான இடங்களாகும்.சுக்கிரனின் ஆட்சி வீடு ஒன்றை சந்திரன் தன் உச்ச வீடாக எடுத்த்க்கொண்டதால் சுக்கிரனுக்கு அதன் உச்ச வீடே வலிமையானதாகும்.எனவே சந்திரனின் ஆட்சி,உச்ச வீடுகள் முதல் சுக்கிரனின் உச்ச வீடு வரை கணக்கிட்டால் சுக்கிரனின் தசைக்காலம் கிடைக்கும்.
  கடகம் முதல் மீனம் வரை - 9, ரிசபம் முதல் மீனம் வரை 11,மொத்தம் 20. சுக்கிர தசையின் அளவு 20 வருடங்களாகும்.

  சூர்ய தசை – 6 வருடங்கள்
  சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்,உச்ச வீடு மேசம்.
  சூரியனுடைய ஆட்சி உச்ச வீடுகளில் சந்திரனோ,அல்லது சந்திரனுடைய ஆட்சி உச்ச வீடுகளில் சூரியனோ உச்சம் நீச்சம் பெறவில்லை. எனவே சூரியனுக்கு சம பலமுள்ள கிரகம் சந்திரனாகும். சுக்கிரனுடைய வீட்டில் சந்திரன் உச்சமடைவதால் உச்ச வீடு முதல் உச்ச வீடு வரை கணக்கிடுவது சந்திரனுக்கு தசைக்காலம் கணக்கிட மட்டுமே பொருந்தும்.சுக்கிரனைத்தவிர மற்ற கிரகங்களுக்கு இந்த விதி பொருந்தாது. எனவே சந்திரனுடைய ஆட்சி உச்ச வீடு முதல் சூரியனுடைய ஆட்சி வரை கணக்கிட சூரியனின் தசைக்காலம் கிடைக்கும்.

  ரிசபம் முதல் சிம்மம் வரை - 4. கடகம் முதல் சிம்மம் வரை - 2. மொத்தம் - 6. சூரியனின் தசைக்காலம் ஆறு வருடங்களாகும்.

  சந்திர தசை – 10 வருடங்கள்
  சந்திரனுடைய ஆட்சி வீடு முதல் உச்ச வீடு வரை கணக்கிட 11 வருகிறது. ஆனால் மொத்த தசாக்காலமான 120 வருடங்களில் 110 வருடங்களை மற்ற கிரகங்கள் பகிர்ந்துகொண்டதால் மிச்சம் உள்ள 10 வருடங்கள் சந்திரனின் தசாக்காலமாகும்.

  செவ்வாய் தசை – 7 வருடங்கள்
  செவ்வாய்க்கு ஆட்சி வீடுகள் மேசம்,விருச்சிகம்,உச்ச வீடு மகரம்,நீச்ச வீடு கடகம்.
  செவ்வாயினுடைய ஆட்சி வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீச்சமடைகிறான்.சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் செவ்வாய் நீச்சமடைகிறான். எனவே செவ்வாய்க்கு தன் ஆட்சி வீடுகளில் பலமில்லை. எனவே சந்திரனின் ஆட்சி உச்ச வீடுகள் முதல் செவ்வாயின் ஆட்சி வீடுகள் வரை கணக்கிடத் தேவையில்லை. உச்ச வீடு முதல் உச்ச வீடு வரை கணக்கிடுவது சுக்கிரனுக்கு மட்டுமே பொருந்தும்.எனவே சந்திரனின் உச்ச வீடு முதல் செவ்வாயின் உச்ச வீடு வரை கணக்கிட தேவையில்லை.சந்திரனின் ஆட்சி வீடு முதல் செவ்வாயின் உச்ச வீடு வரை கணகிட்டால் போதுமானதாகும்.
  கடகம் முதல் மகரம் வரை - 7 வருகிறது.எனவே செவ்வாய் தசையின் அளவு -7 வருடங்களாகும்.

  ராகு தசை – 18 வருடங்கள்
  ராகுவிற்கு ஆட்சி வீடு கும்பம்,உச்ச வீடு ரிசபம்,நீச்ச வீடு விருச்சிகம்.
  ராகு உச்சம் பெறும் ரிசப ராசியிலேயே சந்திரனும் உச்சம் பெறுகிறான். ராகு நீச்சம் பெறும் விருச்சிக ராசியில் சந்திரனும் நீச்சம் பெறுகிறான். எனவே சந்திரனும் ராகுவும் சம பலமுடைய கிரகங்களாகும்.
  சூரியனுக்கு கணக்கிட்டதுபோல் சந்திரனுடைய ஆட்சி உச்ச வீடு முதல் ராகுவினுடைய ஆட்சி வீடு வரை கணக்கிட ராகுவின் தசைக்காலம் கிடைக்கும்.
  கடகம் முதல் கும்பம் வரை - 8 .ரிசபம் முதல் கும்பம் வரை - 10. மொத்தம் 18.

  குரு தசை – 16 வருடங்கள்
  குருவுக்கு ஆட்சி வீடுகள் தனுசு,மீனம். உச்ச வீடு கடகம்,நீச்ச வீடு மகரம்.
  சந்திரனுடைய ஆட்சி வீடான கடகத்தில் குரு உச்சமடைவதால், சந்திரனுக்கு அதன் ஆட்சி வீடே பலமாகும். எனவே சந்திரனின் ஆட்சி வீடு முதல் குருவின் ஆட்சி உச்ச வீடுகள் வரை கணக்கிட்டால் குருவின் தசைக்காலம் கிடைக்கும்.
  கடகம் முதல் தனுசு வரை - 6.கடகம் முதல் மீனம் வரை - 9.கடகம் முதல் கடகம் வரை - 1.மொத்தம் - 16. குருவின் தசைக்காலம் 16 வருடங்களாகும்.

  சனி தசை – 19 வருடங்கள்
  சனிக்கு ஆட்சி வீடுகள் மகரம்.கும்பம்.உச்ச வீடு துலாம்,நீச்ச வீடு மேசம்.
  சந்திரன்,சனி இருவரும்,சுக்கிரனின் ஆட்சி வீடுகளில் உச்சம் பெறுகிறார்கள்.செவ்வாயின் ஆட்சி வீடுகளில் நீச்சம் பெறுகிறார்கள். எனவே சந்திரனும்,சனியும் சம பலமுள்ளவை.குருவிற்கு கணக்கிட்டது போல் சந்திரனின் ஆட்சி வீடு முதல் சனியின் ஆட்சி உச்ச வீடுகள் வரை கணக்கிட்டால் சனியின் தசைக்காலம் கிடைக்கும்.சந்திரனின் உச்ச வீடு முதல் கணக்கிட தேவையில்லை.
  கடகம் முதல் மகரம் வரை -7.கடகம் முதல் கும்பம் வரை -8.கடகம் முதல் துலாம் வரை -4.மொத்தம்- 19.சனியின் தசாக்காலம் 19 வருடங்களாகும்.

  புதன் தசை – 17 வருடங்கள்
  புதனுக்கு ஆட்சி வீடுகள் மிதுனம்,கன்னி,உச்ச வீடு கன்னி.
  புதன் தன் சொந்த வீடான கன்னியில் உச்சமடைகிறார். எனவே சந்திரனின் உச்ச வீடு முதல் புதனின் உச்ச வீடு வரை கணக்கிட தேவையில்லை. சந்திரனின் உச்ச வீடு முதல் புதனின் ஆட்சி வீடு வரை மட்டும் கணக்கிட்டால் போதுமானது.சந்திரனின் ஆட்சி உச்ச வீடுகள் முதல் புதனின் ஆட்சி வீடுகள் வரை கணக்கிட புதனின் தசைக்காலம் கிடைக்கும்.
  கடகம் முதல் மிதுனம் வரை – 12, கடகம் முதல் கன்னி வரை – 3, ரிசபம் முதல் மிதுனம் வரை – 2, மொத்தம் -17 . புதனின் தசைக்காலம் 17 வருடங்கள்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
தையல்
மருத்துவம்
இலக்கியம்
 மரண அறித்தல்