செவ்வாய் தோஷமும் அதற்கான பரிகாரங்களும்!
 • செவ்வாய் தோஷமும் அதற்கான பரிகாரங்களும்!

  செவ்வாய் தோஷமும் அதற்கான பரிகாரங்களும்! பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன.

  அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது.

  நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன?

  அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்ப்போம். இப்போது செவ்வாய் தோஷத்தைப் பற்றி பார்ப்போம். ஒருவருக்கு திருமணப் பொருத்தத்திற்காக, ஜாதகம் பார்க்கும் பொழுது, செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

  ஏனென்றால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க செவ்வாய் மிக முக்கியமான காரணமாகிறது. ஜனன காலத்தை வைத்து, ஜாதகம் கணிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் லக்னம் என்பது விதியைக் குறிக்கிறது. மதியைக் குறிப்பது சந்திரன்.

  மதிக்கும் அதாவது சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் மற்றும் குறிப்பிட்ட ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பை வைத்துத்தான், செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும் என்று சொல்லலாம். லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் இருக்குமிடத்திலிருந்து 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 7-ஆம் இடம், 8-ஆம் இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் ஏற்படும்.

  இன்னும் சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்திற்கு 2,4,7,8,12-இல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷ ஜாதகமாகும். இதில் ஒரு ஆண் ஜாதகருக்கு தோஷம் இருந்து, பெண் ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால் ஆணிற்கு அல்லது கணவனுக்கு இந்தத் திருமண பந்தத்தில் எவ்வித நலனும் இன்றி, முழுக்க கெடுபலனே நிகழும்.

  அதே போல பெண்ணிற்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து, ஆணிற்கு தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால், பெண் அல்லது மனைவிக்கு திருமண உறவால் எவ்விதச் சிறப்பும் இல்லாமல், சீரழிவே ஏற்படும். இதில் ஓர் அறிவியல் உண்மையும் இருக்கிறது.

  செவ்வாய் – அங்காரகன் வெப்பமயமானவர். செவ்வாயை உஷ்ணக்கிரகம் என்றும் குறிப்பிடுவர். செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து, அவர்களின் இரத்தத்தையும் பரிசோதனை செய்து பார்த்ததில், ஏறத்தாழ 90-க்கும் அதிகமான சதவிகிதத்தினருக்கு `ஆர், ஹெச் நெகட்டிவ்” வாக ரத்தமே இருந்தது தெரியவந்துள்ளது.

  இது அரிய வகை ரத்தம். இந்த வகை ரத்தம் அதே வகை ரத்தத்தோடு சேரும் போது தான் பாதிப்பு இருக்காது. மாறாக வேறு வகை ரத்தத்தோடு, திருமண பந்தம் இருந்தால், உடல் அளவில் ஏற்படும் பாதிப்பு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  ஒவ்வாத ரத்தக் கலப்பு, தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதினால்தான், திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, செவ்வாய்க்கு முதல் மரியாதை கொடுக்கிறார்கள். இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், செவ்வாய் தோஷத்திற்கான விளக்கமும் எளிதாகப் புரிந்து விடும். மைனசும், மைனசும் பிளஸ் ஆவதைப் போல , செவ்வாய் தோஷ ஜாதகத்தோடு, செவ்வாய் தோஷ ஜாதகத்தை இணைத்தால், திருமண பந்தம் சிறக்கும் என நம் முன்னோர்கள் அறிவியல் அடிப்படையிலேயே ஜாதகத்தைக் கணித்திருக்கிறார்கள்.

  செவ்வாய் தோஷத்தைப் போலவே, சுக்கிர, ராகு, சனி தோஷங்களையும், ஜாதக ரீதியில் ஒப்பிட்டுப் பார்த்தே, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். மேலெழுந்த வாரியாக 6 பொருத்தம், 8 பொருத்தம் என்று பார்த்து திருமணம் செய்துவிடக் கூடாது. 2,4,7,8,12-இல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பார்த்தோம்.

  இதில் ஏகப்பட்ட விதிவிலக்குகளும் இருக்கின்றன. செவ்வாய் அமைவிடத்தை வைத்து மட்டுமே தோஷம் என்று கூறிவிட முடியாது. செவ்வாய் – மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் இருந்து, அவைகள் 4,7-ம் இடங்களால் சுபர் ஆனால் தோஷம் ஏற்படாது. காரணம் சம்பந்தப்பட்ட வீடுகளில், செவ்வாய் நீச்சம் பெற்றோ, உச்சம் பெற்றோ இருக்கும்.

  செவ்வாய் சூரியனுடன் இருந்தாலும், சூரியனைப் பார்த்தாலும் தோஷம் கிடையாது. செவ்வாயோடு, சந்திரன் மட்டும் இருந்தாலும் தோஷமில்லை. குரு, புதனோடு சேர்ந்தாலும் தோஷம் கிடையாது. சனி, ராகு, கேது, இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், பார்க்கப்பட்டாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

  சிம்மம் அல்லது குடும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. இரண்டாமிடம் மிதுனம் அல்லது கன்னியாகி, அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. நான்காமிடம் மேஷம், விருச்சிகமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது.

  ஏழாமிடத்தில் கடகம், மகரமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும், எட்டமிடத்தில் தனுசு, மீனமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. செவ்வாய் தோஷத்தைப்பற்றி ஒரு தப்பான கருத்து நிலவுகிறது. செவ்வாய் தோஷத்தால், பெற்றோருக்கு ஆகாது, மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்றெல்லாம் நம்புகிறார்கள்.

  ஜோதிட ரீதியாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. செவ்வாய் 1,7,8 ஆகிய இடங்களில் இருக்கும் போது, அது கடுமையான தோஷமாகக் கருதப்படுகிறது. எனவே ஜாதகரீதியாக பொருத்தம் பார்க்கும் போது, அதே போல கடுமையான தோஷமுள்ள ஜாதகத்தை இணைத்தால் பாதிப்பில்லை. செவ்வாய் – 2,12-ஆம் இடங்களில் கடுமை குறைந்து காணப்படுவதால், குறைவான தோஷமே இருக்கும்.

  இவற்றோடு தொடர்புடைய ஜாதகமாக இணைத்துப் பொருத்தம் பார்த்தால் நல்லது. 4-இல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 4,2,12-இல் செவ்வாய் உள்ளவர்களாகப் பார்த்து திருமண பந்தம் ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்கியம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும்.

  ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.

  செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது.

  முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள்.

  வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

  பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்
  திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்து பின்பே திருமணம் செய்கிறார்கள். ஒருவர் பிறக்கும்போது அவரின் ஜாதக ரீதியாக கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் அதை யோக ஜாதகம் என்கிறோம். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி இருந்தால் அதை தோஷ ஜாதகம் என்கிறோம்.
  பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டகரமானதாகிவிடும். பெண்ணின் ஜாதக ரீதியாக எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இருந்தால் இப்படிப்பட்ட தோஷங்கள் உண்டாகின்றன என பார்ப்போம்.
  செவ்வாய் தோஷம்
  ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயானவர் குடும்ப ஸ்தானமான 2லும், சுக ஸ்தானமான 4 லிலும், களத்திர ஸ்தானமான 7லும், மாங்கல்ய ஸ்தானமான 8லும், கட்டில் சுக ஸ்தானமான 12லும் அமைவது செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். இப்படி தோஷம் அமைந்துள்ள பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்த்து திருமணம் செய்வது நல்லது.  2,4,7,8,12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் செவ்வாய் அமைந்திருப்பது போதுமானதாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.
  ராகுகேது தோஷம்
  செவ்வாய் தோஷம் பலருக்கு தெரிந்திருக்கிறது என்றாலும் அதைவிட கடுமையான தோஷமானது ராகு கேது தோஷமாகும். சர்ப கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஒரு  பெண்ணின் ஜாதகத்தில் 1,7  மற்றும் 2,8 ல் இருந்தாலும், 7,8 ம் அதிபதிகள் ராகு, கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும், ராகு கேதுவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ராகு கேது தோஷம் உண்டாகிறது. திருமண வயதில் ராகு கேதுவின் தசா புக்திகள் நடைபெற்றாலும், ராகு கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றாலும், சர்ப தோஷம் உண்டாகி திருமண சுபகாரியங்களில் தடை ஏற்படும். இந்த தோஷம் அமையப் பெற்ற பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்ப்பது நல்லது.
  ராகுகேது தோஷம் அமையப் பெற்றவர்கள் திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது. ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலங்களில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயங்களுக்குச் சென்று எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
  புத்திர தோஷம்
  புத்திர பாக்கியம் என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான வரப்பிரசாதம் ஆகும். குழந்தை இல்லாதவர்களை மலடி பட்டம் கொடுத்து எந்தவொரு நல்ல காரியத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5ம் பாவமும், 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானம் என்பதால் அதில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதுவே 5.9ம் வீட்டில் ராகு, கேது, சனி, புதன் போன்ற  கிரகங்கள் அமையப் பெற்று பகைப் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படுகிறது.
  பெண்களின் மணவாழ்க்கையும், கேது பகவானும்
  திருமண வயதை அடைந்தவர்களுக்கு ராகு, கேதுவின் தசா புத்திகள் நடைபெற்றால் மணவாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அதிலும் கேது ஞான காரகன் என்பதால் கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண மானவர்களுக்கு கூட இந்த கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெறுமேயானால் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட தடைகள் ஏற்படும். குறிப்பாக கட்டில் சுக வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பாதிப்படையும். இதற்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
  மாங்கல்ய தோஷம்
  பெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8ம் பாவம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். 8 ம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் 8ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. இதனால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு இடையூறு உண்டாகும்.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
எம்மவர் நிகழ்வுகள்
வீடியோ
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort