அனைத்து ராசி நேயர்களுக்கும் உங்களது ஆனி மாத ராசி பலன்கள் இதோ,
 • அனைத்து ராசி நேயர்களுக்கும் உங்களது ஆனி மாத ராசி பலன்கள் இதோ,

  அமைதியை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே! கிரகங்கள் சாதகமாக அமைந்துள்ளதால் இந்த மாதம் சிறப்பாக அமையும். செல்வாக்கும் பணவளமும் பெருகும். எந்த விடயத்திலும் ஒரு தெளிவை பெறலாம். எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும்.

  சுக்கிரனால் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாயால் அபார ஆற்றல் பிறக்கும்.

  புதன் யூலை வரை 2-ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. ராகு யூன் 21ல் 6-ம் இடமான கன்னிக்கு வருகிறார். அதன்பின் முயற்சிகளில் வெற்றியைத் தருவார்.

  பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். ஆனால், கேது 12-ம் வீடான மீன ராசிக்கு மாறுகிறார். இதனால் பொருள் விரயம் ஏற்படலாம்.

  வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். பணியாளர்கள் வேலையில் பளிச்சிடுவர். அரசுப்பணியாளர் கோரிக்கை நிறைவேற தாமதமாகும். மாத இறுதியில் பதவி உயர்வு கிடைக்கும் தொழில், வியாபாரத்தில் சிறப்படையலாம்.

  அரசின் சலுகை, வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூலை 4க்கு பிறகு வீண் செலவு ஏற்படும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும்.

  கலைஞர்களுக்கு மதிப்பு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

  புதிய நிலம் வாங்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறும். பெண்கள் நகை வாங்கலாம். கணவர் மற்றும் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மருத்துவச் செலவு குறையும்.

  நல்ல நாள்: யூன் 16,17,18,19,22,23,27,28, யூலை 4,5,6,7, 8,13,14,15,16

  கவன நாள்: யூலை 9,10.

  அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: செந்தூரம்,வெள்ளை

  வழிபாடு: புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். பத்திரகாளிக்கு எலுமிச்சை மாலை சூட்டுங்கள்.

  தலைமைக்கு தகுதியான ரிஷப ராசி அன்பர்களே!

  உங்கள் ராசிநாயகன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் 12ம் இடத்தில் உள்ளதால், அவரால் காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம்.

  ஆனால், யூன் 18 க்கு பிறகு இது சரியாகி விடும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சனி மாதம் முழுவதும் முழு பலனைக் கொடுப்பார்.

  மேலும் கேது யூன் 21ல், 11ம் இடமான மீனத்திற்கு சென்று வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். எடுத்த செயல்கள் வெற்றிகரமாக முடியும்.

  அதே நேரம் ராகு 5-ம் இடமான கன்னி ராசிக்கு வருவது சிறப்பான இடம் அல்ல. அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையை உருவாக்கலாம். பணியாளர்களுக்கு டிரான்ஸ்பரும், யூலை 4க்கு பிறகு அவப்பெயரும் வரலாம்.

  பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். யூன் 20,21ம் திகதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.

  கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிற்பகுதியில் பொருளாதார வளம் நன்றாக இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும்.யூலை 6,7,8ல் திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.

  கலைஞர்களுக்கு 10ம் திகதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்களும், அரசிடம் இருந்து விருதும் கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிக பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

  விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் உண்டு. நெல், நிலக்கடலை, கிழங்கு வகைகள் போன்றவை நல்ல மகசூல் தரும்.மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்தால் மதிப்பெண் குறையாது.

  பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறலாம். புத்தாடை, நகை வாங்கலாம். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். பிள்ளைகள் உடல்நிலையிலும் அக்கறை தேவை.

  நல்ல நாள்: யூன்18,19,20,21, 24,25,26,29,30 யூலை1,6,7,8, 9, 10,15,16.

  கவன நாள்: யூலை11,12 சந்திராஷ்டமம்.

  அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, சிவப்பு.

  வழிபாடு: பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். சூரிய வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் வழிபாடு தைரியத்தைத் தரும்.

  குடும்ப ஒற்றுமையை விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

  இம்மாதம் சீரான பலனைக் காணலாம். முக்கிய கிரகங்களில் குரு மட்டும் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம்.

  பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். சுக்கிரனால் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
  பெண்களால் பொருள் சேரும். பாங்க் கையிருப்பு உயரும் என்பதால் விரும்பிய பொருட்களை வாங்கலாம்.

  விருந்து விழா என சென்று வருவீர்கள். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் முயற்சி கைகூடும்.

  கேது உங்கள் ராசிக்கு 11ம் இடமான மேஷத்தில் இருந்து பல்வேறு நன்மைகளைத் தருவார். அவர் யூன் 21ல் 10-ம் இடமான மீனத்திற்கு செல்கிறார்.

  இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. உடல் உபாதைகளைத் தரலாம். ராகு 5-ம் இடமான துலாமில் இருந்து 4-ம் இடமான கன்னிக்கு செல்லும் போது குடும்ப பிரச்னை மறையும்.

  அதே நேரம் அலைச்சலையும், புதிய பிரச்னைகளையும் உருவாக்கலாம். புதனால் யூலை 4க்கு பிறகு வீட்டுப் பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். பணியாளர்கள் இடமாற்றம் காண்பர்.

  அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல பலனை காணலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வருமானம், திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் வசதிகளை அடைவர். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.

  ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிக சிரத்தை எடுத்து படித்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும். நவீன யுக்தியை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தலாம்.

  பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து போகவும். பணம், நகை, ஆடை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை வரலாம்.

  நல்ல நாள்: யூன் 15,20,21,22,23,27,28 யூலை 2,3,9,10,11,12.

  கவன நாள்: யூன் 16,17 யூலை 13,14.

  அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: மஞ்சள், வெள்ளை

  வழிபாடு: ஏழை மாணவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை பெருமாளுக்கும், சுக்கிரனுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.

  இக்கட்டான சூழல்களை சமாளிக்கும் திறனுள்ள கடக ராசி அன்பர்களே!

  இந்த மாதம் புதன் யூலை 4 வரையும், சுக்கிரன் யூன் 18ல் இருந்து யூலை14 வரையும் நன்மை தருவார்கள். செவ்வாய் மாதம் முழுவதும் நன்மை தருவார். கடவுளிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும்.

  ராகு யூன் 21ல் துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு வந்து நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் கொடுப்பார்.

  ஆனால், கேது 9-ம் இடமான மீனத்திற்கு போய், ராகு கொடுத்த பொருளைப் பறிப்பார். ஆக, பொருளாதார சூழல் சமஅளவில் இருக்கும். புதனால் யூலை 4வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.அதன்பின் எதிரிகளால் தொல்லை வரலாம்.

  கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். யூன் 18க்கு பிறகு அவப்பெயர் மறையும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர் வகையில் வீண்விரோதம் வரலாம். பணியாளர்களுக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. பொலிஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

  தொழில், வியாபாரத்தில் யூன் 15, யூலை 11,12ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் யூன் 18க்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களை பெற்று முன்னேற்றம் அடையலாம். அரசியல்வாதிகள் மனதிருப்தியோடு காணப்படுவர். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

  யூலை 18க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். விவசாயம் வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. புதிய சொத்து வாங்கலாம்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

  பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவார்கள். குடும்பம் நல்ல நிலைக்கு வரும். பிறந்த வீட்டிலிருந்து பொருட்கள் வர வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டி இருக்கும்.

  நல்ல நாள்: யூன்15,16,17,22,23,24,25,29,30 யூலை1,4, 5,11,12,13,14.

  கவன நாள்: யூன்18,19 யூலை15,16 சந்திராஷ்டமம்.

  அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, சிவப்பு.

  வழிபாடு: ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குங்கள். காலையில் சூரியனை வழிபடுங்கள். கோதுமை, பாசிப்பயிறு தானம் செய்யலாம். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபட தவறாதீர்கள்.

  விடாமுயற்சியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

  சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவார்கள். சுக்கிரன் யூன் 18 வரையும், யூலை 14 க்கு பிறகும் நன்மை தருவார். ராசிக்கு மூன்றாம் இடமான துலாமில் இருந்து நன்மை வழங்கிய ராகு, யூன் 21ல் 2-ம் இடமான கன்னிக்கு வந்துள்ளார்.

  இது சிறப்பான இடம் அல்ல. இதனால் குடும்பத்தில் பிரச்னையும், வெளியூர் பிரயாணத்தையும் ஏற்படுத்துவார். கேது 9 ல் இருந்து பொருள் இழப்பு, முயற்சியில் தோல்வியைத் தந்திருப்பார். அவர் யூன் 21ல் 8-ம் இடத்திற்கு மாறுவதன் மூலம் கெடுபலன் இனி நடக்காது. அதேநேரம் அவர் மேஷத்திற்கு மாறுவதும் சிறப்பானது அல்ல. அவரால் உடல் உபாதை வரலாம். சூரியனால் சமூகத்தில் மதிப்பு கூடும்.

  அரசு வகையில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

  யூலை 4ம் திகதிக்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் நன்மையளிக்கும். பணியாளர்களுக்கு வேலையில் மகிழ்ச்சியும் ஈடுபாடும் அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பண செழிப்பு கூடும். ஆனால், எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மன மகிழ்ச்சியோடு இருப்பர்.

  மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும்.

  செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் சாதகமான போக்கு காணப்படவில்லை. பெண்கள் பிள்ளைகளால் முன்னேற்றம் காணலாம். புத்தாடை, நகை வாங்கலாம். மாத இறுதியில் பண வரவு இருக்கும். உடல்நிலையில் சிறு கோளாறுகள் ஏற்பட்டு சரியாகும்.

  நல்ல நாள்: யூன் 16,17,18,19,24,25,26,27,28 யூலை 2,3,6, 7,813,14,15,16

  கவன நாள்: யூன் 20,21 சந்திராஷ்டமம்.

  அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: செந்தூரம், பச்சை

  வழிபாடு: மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விநாயகர், துர்க்கை வழிபாடு நடத்துங்கள். யூன் 18க்குப் பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கும், லட்சுமிக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

  நட்புணர்வுடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!

  இந்த மாதம் சூரியன்,குரு, நற்பலனை கொடுப்பார்கள். புதன் யூலை 4ல் இடம்மாறி நன்மை தருவார். சுக்கிரன் யூலை 14 வரை நற்பலன் அளிப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. குருவின் 7,9-ம் பார்வை மூலம் பிரச்னை அனைத்தும் நீங்கும்.

  ராகு யூன் 21ல் உங்கள் ராசிக்கு வருகிறார். அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேது இதுவரை உடல் உபாதை தந்திருக்கலாம். யூன் 21ல் 7-ம் இடமான மீனத்துக்கு வருகிறார். மனைவி வகையில் பிரச்னையும், அலைச்சலும் ஏற்படும். சூரியன், குருவால் நினைத்தது எளிதில் நிறைவேறும். முயற்சியில் இருந்த தடை அகலும்.

  முக்கிய பொறுப்புகளை பெண்கள் வசம் ஒப்படைப்பது சிறப்பை தரும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்டவர்கள் அதிக வருவாயைப் பெறுவர்.

  கடந்த காலத்தில் ஏற்பட்ட பண விரயம் யூலை 4 க்கு பிறகு ஏற்படாது. யூலை 14க்கு பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படும்.பணியாளர்களுக்கு புதனால் யூலை 4 வரை சிரமம் நேரிட வாய்ப்புண்டு. சிலர் வீண் பொல்லாப்பை சந்திப்பர், விட்டுக் கொடுத்து போகவும்.

  திடீர் செலவால் பணம் விரயமாகும். அதன்பின் கோரிக்கை நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கலைஞர்கள் மன மகிழ்ச்சியோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர் பார்த்த முன்னேற்றம் காணலாம்.

  மாணவர்களுக்கு சிறப்பான பலன் உண்டாகும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது சிறப்பைத் தரும். யூலை 4ம் திகதிக்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

  விவசாயிகளுக்கு பழம், கிழங்கு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறப்பாக அமையும். யூலை 9,10 ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். உடல் நலம் சுமாராக இருக்கும்.

  நல்ல நாள்: யூன்18,19,20,21,27,28,29,30 யூலை 1,4,5,9,10,15,16

  கவன நாள்: யூன் 22,23 சந்திராஷ்டமம்

  அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: செந்தூரம், மஞ்சள்

  வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை, விநாயகரை வணங்கி வாருங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

  உழைப்பால் உயர்வு காணும் துலாம் ராசி அன்பர்களே!

  முக்கிய கிரகங்களில் எதுவுமே சாதகமாக காணப்படவில்லை. இருந்தாலும் கேது, புதன் ஆகிய இருவராலும் நன்மை உண்டாகும். சுக்கிரன் சாதகமற்று இருந்தாலும் யூன் 18ல் இருந்து நன்மை தருவார்.

  இது தவிர குருவின் 5ம் பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன் மூலம் எந்த தடையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கேது யூன் 21ல் 6-ம் இடமான மீனத்திற்கு வருவதால் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன், பொருள் தாராளமாக கிடைக்கும். செயலில் வெற்றி உண்டாகும். ராகு ராசியில் இருந்து உறவினர் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம்.

  யூன் 21ல் அவர் இடம்மாறி 12 ம் இடத்திற்கு மாறி இருப்பதால் பொருள் விரயத்தை கொடுக்க வாய்ப்புண்டு. சூரியனால் வீண் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். யூலை 4க்குப் பிறகு வீண் விவாதத்தை தவிர்க்கவும். சுக்கிரனால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும்.

  தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலம் வருமானம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுங்குவீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு கடந்த மாதம் பெண்களால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் யூன் 18க்குப் பிறகு அடியோடு விலகும்.

  யூன் 29,30 யூலை 1ம் திகதிகளில் உங்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்கள் மாத தொடக்கத்தில் தீவிர முயற்சியின் பேரில் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

  யூன் 18க்குப் பிறகு, சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காணலாம். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் கவுரவத்தோடு காணப்படுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கும்.

  விவசாயிகள் மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் காணலாம். பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும். பெண்கள் ஆடை, நகை வாங்குவர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை.

  நல்ல நாள்: யூன்15,20,21,22,23,29,30, ஜூலை1,2,3,6,7, 8,11,12

  கவன நாள்: யூன் 24,25,26 சந்திராஷ்டமம்

  அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, பச்சை

  வழிபாடு: தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து அர்ச்சனை செய்யுங்கள். மாரியம்மனை வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜை செய்யலாம்.

  சமயோசிதமாய் யோசிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

  இம்மாதம் செவ்வாய், குரு நன்மை தருவார்கள். புதன் யூலை 4க்கு பிறகும், சுக்கிரன் யூலை 14க்கு பிறகும் நன்மை தருவார்கள்.ராகு யூன் 21ல், உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னிக்கு செல்வதால் இதுவரை இருந்துவந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.

  கேது யூன் 21ல், 5-ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளார். இந்த இடத்தில் அவர்அரசு வகையில் சிற்சில பிரச்னைகளைத் தரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

  உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. புதனால், யூலை 4வரை கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக்கொடுத்து போகவும்.

  யூலை 4க்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

  உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பொலிஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

  சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், அரசு வகையில் அனுகூலம் இல்லை.எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மாதக் கடைசியில் மறையும்.

  கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். விவசாயி
  களுக்கு எள், கரும்பு, பனை மூலம் வருவாய் அதிகம் கிடைக்கும்.

  புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு குடும்பம் தழைத்து ஓங்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். நகை, புத்தாடை வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

  நல்ல நாள்: யூன்16,17,22,23,24,25,26, யூலை2,3,4,5,9, 10,13,14.

  கவன நாள்: யூன்27, 28 சந்திராஷ்டமம்.

  அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, மஞ்சள்

  வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடவும். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். வெள்ளிக்கிழமை முருகனுக்கும், சுக்கிரனுக்கும், அர்ச்சனை செய்யுங்கள்.

  பேச்சிலேயே பிறரை மயக்கிவிடும் தனுசு ராசி அன்பர்களே!

  இந்த மாதம் சனிபகவானின் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். யூன் 18 வரை சுக்கிரனும், யூலை 4 வரை புதனும் நன்மை தருவார்கள்.

  இதுவரை 11-ம் இடமான துலாம் ராசியில் இருந்த ராகு யூன்21ல் 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார்.

  கேது இதுவரை மேஷ ராசியில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் பிள்ளைகளால் பிரச்னையை தந்து இருக்கலாம். யூன் 21ல், 4-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்.

  உடல் நலம் பாதிப்பு வரலாம். யூலை 4க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கணவன்- மனைவி இடையே சிற்சில கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். யூன் 15, யூலை 11,12ல் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.

  பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். யூலை 4க்கு பிறகு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும் என்றாலும் குருவின் பார்வையால் திருப்தி காண்பீர்கள்.

  தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு எனினும், போட்டியாளர்களால் தொல்லை ஏற்படும். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். கலைஞர்கள் கடும் முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்களைப் பெற வேண்டியிருக்கும்.

  அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறலாம். பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது. மாணவர்களின் வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கும். அதே நேரம் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.

  விவசாயத்தில் பசு வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை. பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. சூரியனால்அலைச்சல் அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

  நல்ல நாள்: யூன் 15,18,19,24,25,26,27,28, யூலை 4,5,6,7,8,11,12,15,16.

  கவனநாள்: யூன் 28,30, யூலை 1 சந்திராஷ்டமம்.

  அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: பச்சை, கருப்பு

  வழிபாடு: வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அதிகாலையில் குளித்து சூரிய வழிபாடு நடத்துங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டுங்கள். பைரவரை வழிபடுங்கள்.

  உழைப்பில் சிறந்த மகர ராசி அன்பர்களே!

  சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார்கள். மேலும், சுக்கிரன் யூலை 14 வரையும், புதன் யூலை 4க்கு பிறகும் நன்மை தருவர். குருவின் 5-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது.

  கேது யூன் 21ல் 3-ம் இடமான மீனத்துக்கு வந்து பல்வேறு நன்மைகளைத் தருவார். ராகு யூன் 21ல், 9-ம் இடமான கன்னிக்கு மாறுவது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.

  ஆனால், பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால், செயல்பாடுகளில் சிற்சில தடைகள் உருவாகலாம். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.

  அத்தியாவசிய தேவைகள் கிடைக்க எந்த தடையும் இல்லை. தம்பதியினர் இடையே மகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் செவ்வாய் சாதகமாக இல்லாததால் பொருள் நஷ்டம் வரலாம். மாதத் தொடக்கத்தில் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

  நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.பணியாளர்களுக்கு பணியில் மதிப்பு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். யூலை 4க்கு பிறகு பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பயண பீதி இருக்காது.தொழில், வியாபாரத்தில் சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள்.

  பொருளாதார வளம் கூடும். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். யூன் 27,28ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். யூலை 4க்கு பிறகு தொழில் ரீதியாக பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும்.மாத இறுதியில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.

  மாணவர்களுக்கு, இந்த நல்ல மாதத்தை பயன்படுத்தி முன்னேறுவது உங்கள் கையில் தான் உள்ளது. விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் வரும். பெண்கள் விருந்து விழா என சென்று வருவார்கள். புத்தாடை, நகை வாங்கலாம்.

  நல்ல நாள்: யூன் 16,17,20,21,27,28,29,30, யூலை 1,6,7,8,9,10,13,14.

  கவன நாள்: யூலை 2,3.

  அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: செந்தூரம், மஞ்சள்

  வழிபாடு: சனிக்கிழமை பெருமாளையும், ஆஞ்சநேயரையும், செவ்வாயன்று முருகனையும் வழிபடுங்கள். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

  அமைதியாய் இருந்து காரியம் சாதிக்கும் கும்ப ராசி அன்பர்களே!

  இந்த மாதம் சுக்கிரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். புதன் யூலை 4 வரை நற்பலன் தருவார். குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. இதனால் எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

  உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்படும். அதுகண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். ராகு யூன் 21ல் 8-ம் இடமான கன்னிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளையும், உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம்.

  கேது யூன் 21ல் இடம்மாறி 2-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இனி அவரால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. வீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்புண்டு. விழிப்புடன் இருக்கவும். புதனால் எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். யூலை 4க்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். கணவன்-மனைவியிடையே அன்பு மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

  வேலைப்பளு கூடும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். போட்டியாளர்களின் தொல்லை இருக்கும். யூன் 29 ,30 யூலை 1ல் அதிக பணவரவு இருக்கும்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

  அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆனால், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். விவசாயிகளுக்கு பழ வகை, மானாவாரி பயிர்கள், கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும்.

  பெண்களுக்கு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பணம் கணிசமாக சேரும். குடும்பத்தில் முக்கியத்துவம் தரப்படும். உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம்.

  நல்ல நாள்: யூன் 18,19,22,23,29,30, யூலை 1,,2,3,9,10, 11,12,15,16.

  கவன நாள்: யூலை4,5 சந்திராஷ்டமம்.

  அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: பச்சை, வெள்ளை

  வழிபாடு: ஏழை மாணவர்களுக்கு பணஉதவி செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்.

  எதையும் சாதிக்கும் திறமையுள்ள மீன ராசி அன்பர்களே!

  குரு மாதம் முழுவதும் நன்மை தருவார். யூன் 18ல் சுக்கிரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார்.புதன் யூலை 4-ம் திகதிக்கு பிறகு நன்மை தருவார்.குருவின் 5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதகமாகவும் அமைந்துள்ளது.

  இதனால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். யூன் 21ம் திகதி ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறியுள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அவப்பெயரைச் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2-ம் இடமான மேஷத்தில் இருந்து பகைவர்களால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார். இவர் யூன்21ல் உங்கள் ராசிக்கு வருகிறார்.

  இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், பழைய கெடுபலன்களின் தாக்கம் குறையும். மாதத் தொடக்கத்தில் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

  வசதிகள் சீராக இருக்கும். யூன் 18-ந் திகதிக்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். தம்பதி இடையே அன்பு பெருகும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் சாதமாக இருப்பதால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். பணியாளர்களுக்கு வழக்கமான பணிகள் சீராக நடக்கும். பணியிடத்தில் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம்.

  யூன் 18க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். லாபத்திற்கு குறை இருக்காது. யூலை 2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர்.

  எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம்.விவசாயிகள் அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது.

  பெண்கள், கணவன் மற்றும் குடும்பத்தாரின் நன் மதிப்பை பெறுவர். புத்தாடை, நகை வாங்கலாம். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். உடல்நலம் சிறப்பாக இருந்தாலும், அலைச்சல் காரணமாக சிறுஅளவில் அசதி
  இருக்கும்.

  நல்ல நாள்: யூன்15,16,17,20,21,24,25, யூலை 2,3,4,5,11,12,13,14

  கவன நாள்: யூலை 16,7,18 சந்திராஷ்டமம்,

  அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: மஞ்சள்,வெள்ளை

  வழிபாடு: காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
மரண அறிவித்தல்
தையல்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்