அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்ததால் தங்கம் விலை மேலும் குறைகிறது
 • அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்ததால் தங்கம் விலை மேலும் குறைகிறது

  அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்ததால் தங்கம் விலை மேலும் குறைகிறது

  கடந்த மே மாதம் 7–ந்தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,823–க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 584–க்கும் விற்றது. அதை தொடர்ந்து தங்கம் விலையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டு வருகிறது.

  கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. அது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

  அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மேம்பாடு மற்றும் வலுவான நிலையே தங்கத்தின் விலை சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. மேலும் தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களின் கவனம் தற்போது பங்கு சந்தையின் மீது விழுந்துள்ளது.

  அதனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதன் விலை குறைந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்க முந்தைய மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக அதிகரித்தது.

  ஆனால், தற்போது பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  எனவே, தங்கம் விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்படும் என தெரிகிறது. அதனால் தங்கம் விலை பவுன் ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விவசாயத் தகவல்கள்
சட்டம்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்