ஜெயலலிதா அம்மையாருக்கு உலகத்தமிழர்களின் சார்பாக நன்றிகள்,
 • ஜெயலலிதா அம்மையாருக்கு உலகத்தமிழர்களின் சார்பாக நன்றிகள்,

  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு உலகத்தமிழர்களின் சார்பாக நன்றிகள்

  இந்தியாவின்  பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்கும் விழாவில் கொலைகாரன்  ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர்  மாண்புமிகு  செல்வி ஜெயலலிதா அம்மையார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இவ் விடையத்தில் நாம் இதை வரவேற்று அறிக்கை விட கடமைப் பட்டுள்ளோம்.

  இந்தியாவின் புதிய ஆட்சி மாற்றத்தை உலகத்தமிழினமே நம்பிக்கையாக எதிர்பார்க்கும் இத் தருணத்தில் புதிய பிரதமராக பதிவி ஏற்க இருக்கும்   நரேந்திரா மோடி அவர்களின் சார்பாக ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு காரணமாக்கியவர்களில் ஒருவரான தமிழினப் படுகொலையாளி ராஜபக்சேவை பதவி ஏற்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தது உலகத்தமிழினத்தின் மனத்தில் ஆழ்ந்த வேதனையை உருவாகி உள்ளது .

  எமது வேதனையை புரிந்து தனது கண்டனத்தை அறிக்கை ஊடாக வெளிப்படுத்திய மாண்புமிகு  செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு உலகத் தமிழர்களின் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றது .

  கடந்த 65 ஆண்டுகளாக ஈழத் தமிழினத்துக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தமிழகச் சட்ட மன்றத்தில் முதலமைச்சர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களால் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பொருட்டு, ‘தனித் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு’ நடத்த ஒரு பொதுநிலை உருவாக்குவீர்கள் என உலகத் தமிழ் இனம் மிக வலுவான எதிர்பார்ப்போடு தங்களின் வெற்றியை வாழ்த்தி நிக்கிறது.

  பாராளுமன்ற தேர்தலின் வெற்றி ஈட்டிய மாண்புமிகு  செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தி  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  எங்கள் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மற்றும் தமிழின உணர்வாளர்கள் ஈழத்தமிழர்களை   ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவை, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கவிடாமல் பாரிய மக்கள் போராடங்களை செய்யுமாறு சகோதர உணர்வுடன் கேட்டுக் கொள்கின்றோம் .

  அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
ஆன்மிகம்
சட்டம்
சரித்திரம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort