மகிந்தவின் இந்திய வருகையை எதிர்த்து இளைஞன் தீக்குளிக்க முயற்சி!
 • மகிந்தவின் இந்திய வருகையை எதிர்த்து இளைஞன் தீக்குளிக்க முயற்சி!

  மகிந்தவின் இந்திய வருகையை எதிர்த்து இளைஞன் தீக்குளிக்க முயற்சி!

  இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி சேலத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்திய பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 26–ம் திகதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி சேலத்தில் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

  தமிழகத்தின் சேலம் – கருப்பூரை சேர்ந்த வெற்றிவேல் (31). இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்திற்கு வந்தார்.

  பிறகு அவர் கோர்ட்டில் உள்ள நீதிதேவதை சிலை முன்பு நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை முழங்கினார்.

  பின்னர் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொள்ள முயற்சித்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரளாக வந்து வெற்றிவேல் வைத்து இருந்த மண்எண்ணை கேனை பறித்து கொண்டனர்.

  பின்னர் வெற்றிவேலை பிடித்து சேலம் அஸ்தம்பட்டி பொலிசில் ஒப்படைத்தனர்.

  அப்போது வெற்றிவேல் கூறியதாவது:–

  நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவிற்கு இலங்கை ஜனாதிபதி வரக்கூடாது. அவர் இந்தியா வருவது என்னை போல் பலருக்கும் பிடிக்கவில்லை, என் எதிர்ப்பை தெரிவிக்க தீக்குளிக்க முயற்சித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

  இதேவேளை, இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (24) மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.

  மேலும் 26–ம் திகதி அன்று தமிழக வாழ்வுரிமை கட்சி சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
மரண அறிவித்தல்
தொழில் நுட்பம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்