டில்லியில் ராஜ்நாத் சிங்கிடம் வைகோ எச்சரிக்கை!
 • டில்லியில் ராஜ்நாத் சிங்கிடம் வைகோ எச்சரிக்கை!

  தொடக்கமே தவறாக போய் விடக்கூடாது: டில்லியில் ராஜ்நாத் சிங்கிடம் வைகோ எச்சரிக்கை!

  நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

  வரும் 26-ந் தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

  இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ச உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  மோடி விழாவில் ராஜபக்ச கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இதேபோல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ அறிவிக்கை வெளியிட்டார். மேலும், பா.ஜ.க. தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

  ஆனால் பாஜக தலைவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர்.

  இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை புதுடில்லியில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.

  அப்போது, மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்ச கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

   மோடியின் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடைபெறும் என்று நம்புகிறேன். ஆனால், அவரது பதவியேற்பு விழாவில் ராஜபக்ச கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.க.வின் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இதுபோன்று நடக்கக்கூடாது. தொடக்கமே தவறாக போய் விடக்கூடாது. உங்கள் (பா.ஜ.க.)  நன்மைக்காக சொல்கிறேன் என்றார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
இலங்கை செய்தி
சரித்திரம்
தங்க நகை
 மரண அறித்தல்