டில்லியில் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு, ஜெயலலிதா கையில் தங்கியுள்ளது! சீமான் வியூகம்!!
 • டில்லியில் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு, ஜெயலலிதா கையில் தங்கியுள்ளது! சீமான் வியூகம்!!

  டில்லியில் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு, ஜெயலலிதா கையில் தங்கியுள்ளது! சீமான் வியூகம்!!

  வரும் 26-ம் தேதி டில்லியில் நடைபெறவுள்ள பிரதமர் பதவியெற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே கலந்து கொள்வதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான எத்தகைய கிடுகிடு போராட்டத்தை அறிவிக்கப் போகிறார் என்பதை அறியும் ஆவல், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.

  இது தவிர, செந்தமிழனின் கிடுகிடு போராட்டம் டில்லியின் எந்தப் பகுதியில் நடக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள  டில்லி போலீஸூம் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  டில்லியில் நாம் தமிழர் போராட்டம் நடத்தும் இடங்களில் யாராவது சிங்களர்கள் இருந்துவிட்டால், நிலைமை விபரீதமாக போய்விடும் என்பதே அதற்கு காரணம்.

  premium-idஇந்த நிலையில், ராஜபக்ஷே வருகையை எதிர்த்து செந்தமிழன் சீமான்  இரு வகை போராட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

  விபரம் அறிய நாம் தமிழர் கட்சியினரை தொடர்பு கொண்டபோது,  இரு வகை போராட்டங்கள் பரிசீலனையில் உள்ளதை ஒப்புக் கொண்டார்கள்.

  பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளாவிட்டால் ‘போராட்டம்-A’, ஜெயலலிதா கலந்து கொண்டால் ‘போராட்டம்-B’  என்றும் தெரிவித்தார்கள் அவர்கள்.

  நாம் தமிழர் பிரமுகர் ஒருவர் கூறுகையில், “வரும் செய்திகளை பார்த்தால், டில்லியில் வைகோ போராட்டம் நடத்தவுள்ளார் போலிருக்கிறது. இதனால், நாமும் போராட்டம் நடத்தாவிட்டால் நன்றாக இருக்காது. ஆனால், அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

  புரட்சித்தலைவி முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாவிட்டால் ‘போராட்டம்-A’யின்படி,  டில்லியில் ராஜபக்ஷேவுக்கு கறுப்புக் கொடி காட்டல், உருவபொம்மைக்கு செருப்பால் அடித்தல், சிங்களர்கள் யாராவது தென்பட்டால் கல்லெறிந்து கலைத்தல் ஆகியவை நடைபெறும்.

  நாம் இதுவரை நடத்திய தமிழக போராட்டங்களில் உருவபொம்மைக்கு செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடிப்பதுதான், நாம் தமிழர் கட்சியின் தனித்தன்மை போராட்டமாக இருந்தது. ஆனால், டில்லியில் துடைப்பம் ஆம் ஆத்மியின் கட்சி சின்னமாக உள்ளதால், செருப்பு மட்டுமே பயன்படுத்தப்படும்.

  ஒருவேளை புரட்சித்தலைவி முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள்  பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால், அவர் கலந்து கொள்ளும் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தன்மான தமிழனுக்கு அழகல்ல. சரித்திரம் எம்மை மன்னிக்காது. திராவிடத்துக்கே நாம் செய்யும் துரோகமாகிவிடும்.

  இதனால், போராட்டம்-B நடத்தப்படும்.

  அதன்படி டில்லிக்கு வரும் ராஜபக்ஷேவுக்கு பேஸ்புக்கில் கருப்புக் கொடி காட்டப்படும்” என விளக்கமளித்தார்.

  அதாவது, ஜெயலலிதா வராவிட்டால்- ‘வீழ்ந்துவிடாத வீரம்’.  ஒருவேளை ஜெயலலிதா டில்லிக்கு வந்துவிட்டால்- ‘மண்டியிடாத மானம்’.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
தங்க நகை
தொழில்நுட்பம்
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்