சுஷ்மா ஸ்வராஜை வைத்து ராஜபக்ஷேவை வீழ்த்த வைகோ திட்டம்!
 • சுஷ்மா ஸ்வராஜை வைத்து ராஜபக்ஷேவை வீழ்த்த வைகோ திட்டம்!

  பா.ஜ.க. ஆட்சியில், சுஷ்மா ஸ்வராஜை வைத்து ராஜபக்ஷேவை வீழ்த்த வைகோ திட்டம்!

  லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளைதான் வெளியாகும் என்ற போதிலும், மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  இதில் லோக்சபா பா.ஜ.க. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறையை விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த தகவலை யார் எப்படி எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சரானால், வைகோதான அதிகம் கதிகலங்கிப் போவார் என்பதாக ஒரு பேச்சு உள்ளது.

  என்ன சமாச்சாரம் அது?

  காரணம், பொதுவாகவே டில்லி பா.ஜ.க. தலைவர்கள்,  இலங்கையுடன், குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவுடன் நெருக்கமான உறவு கொண்டவர்கள். அதிலும் தற்போது வெளியுறவுத் துறையை விரும்புவதாக சொல்லப்படும் சுஷ்மா ஸ்வராஜ்தான் மகிந்த ராஜபக்ஷேவுக்கு மிக நெருங்கிய நண்பராக அறியப்பட்டவர்.

  இந்திய எம்.பி.க்களின் இலங்கை பயணத்தின் போது ராஜபக்சேவை தனியே போய் சந்தித்து பேசியவர் சுஷ்மா ஸ்வராஜ். அத்துடன் இலங்கையில் “ஒன்றுபட்ட இலங்கையைத்தான் இந்தியா ஆதரிக்கும்” என்று எதிர்க்கட்சியாக எம்.பியாக இருக்கும்போதே வெளியுறவுக் கொள்கை பேசியவர்.

  சுஷ்மாதான் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு ராஜபக்சேவை வரவழைக்கவும் காரணமாக இருந்தவர்.

  அப்போது சாஞ்சிக்கே போய், ராஜபக்ஷேவுக்கு எதிராக கொடிபிடித்தவர்  வைகோ.

  தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் முதல் ஆளாக போய் இணைந்து கொண்டவரும் வைகோதான்.

  டில்லி விவகாரங்கள் பற்றி நன்றாகவே அறிந்துள்ள வைகோவுக்கு, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், சுஷ்மா ஸ்வராஜ் எந்த அமைச்சை விரும்புவார் என்று தெரியாமலா இருந்திருக்கும்?  அப்படியிருந்தும், பா.ஜ.க. கூட்டணியில் அண்ணன் வைகோ இணைந்தார் என்றால், அதன் அர்த்தம் என்ன?

  ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்?

  ஒருவேளை  அந்த திட்டத்தின்படி.. சுஷ்மாவை கொண்டே ராஜபக்ஷேவை வீழ்த்தி, ஐ.நா. வாசல்வரை தரதரவென இழுத்துச்சென்று…

  சேச்சே.. இப்போது அவசரப்பட வேண்டாம். முதலில் அண்ணன் வைகோ சொந்த தொகுதியில் ஜெயித்து, எம்.பி. ஆகி வரட்டும். நம் திட்டத்தை அப்புறம் யோசிக்கலாம்.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
தங்க நகை
இந்திய சட்டம்
 மரண அறித்தல்