வானம் பகலில் நீலமாக தோன்றுவதற்கான காரணம் - விஞ்ஞான விளக்கம்.
 • வானம் பகலில் நீலமாக தோன்றுவதற்கான காரணம் - விஞ்ஞான விளக்கம்.

  இது அன்றாடம் நாம் காணும் ஒரு காட்சி. அது எமக்கு பழகிப்போனதால் அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவதில்லை. மந்தாரமோ, பனிமூட்டமோ இல்லாத பகல் பொழுதில் வானம் நீலமாக காட்சி தருகின்றது. அதனால் பூமிக்கு கூரை இருக்கிறதா? அதன் நிறம் நீல நிறமா? என எண்ணத் தோன்றுகிறது. இக் தோற்றத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கு முதலில் ஒளி பற்றியும், வளிமண்டலம் பற்றியும் அறிந்து கொள்வோம்.

  ஒளி இல்லாத நிலையில் நாம் எதையும் பார்க்க இயலாது; நம்மைச் சுற்றியுள்ள பல வண்ணப் பொருட்களை ஒளியின் உதவி கொண்டே நாம் காண்கிறோம். ஒளிக்கதிர்கள் ஒரு பொருளின் மீது விழுகையில் அதை நாம் காண முடிகிறது. அதன் தலைகீழ் பிம்பமானது நம் கண்களின் விழித்திரையில் (retina) படிகிறது. நமது மூளையின் உதவியுடன் அப்பொருளை நாம் அப்படியே காண்கின்றோம். அப்பொருள் என்ன என்பதையும் நாம் உணருகிறோம்.

  அப்பொருளில் படும்  ஒளிக்கற்றையில் உள்ள நிறங்களில் சிலவற்றை அப்பொருள் உட்கிரகித்து விடுகின்றன. சில நிறக் கற்றைகள் அதில் தெறிப்படைந்து எமது கண்ணில் படுகின்றது. அதனாலேயே நாம் அப்பொருளின் நிறத்தை உணர்கின்றோம்.

  வானம் நீலமாக தோற்றுவதை நாம் பூமியில் இருக்கும் போதுதான் காணமுடியும். இதை நாம் சற்று வித்தியாசமான இடத்தில் (பூமிக்கு வெளியே வாயு மண்டலம் அற்ற இடத்தில்) இருந்து நோக்கினால் (சுமார் 20 மைல்களுக்கு மேல்) வானம் இருண்டு தோன்றும். இதனை அண்டத்தில் இருந்து அவதானித்த விஞ்ஞானிகளின் கூறுகின்றனர்.

  இவற்றில் இருந்து நாம் சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒளிக்கதிகளுக்கு பூமியில் இருந்து 20 மைல்களுக்குள் ஏதோ நிகழ்வதனால்தான் பூமியில் இருப்போருக்கு வானம் நீலமாக தோற்றமளிக்கின்றது என ஊகிக்கலாம். ஒளிக்கதிகள் வெற்றிடமான அண்டத்தைக் கடக்கும் போது குறிப்பிடத்தக்கதாக எதுவும் நிகழவில்லை என்பதும், வாயு மண்டலத்தைக் கடந்து பூமிக்குள் வரும்போதுதான் மாற்றம் நிகழ்கின்றது என்பதும் கவனிக்கப்பாலது.

  ஒளி அலைகள் வானவெளியில் 288,792 km/sec (186,282 miles/sec என்ற வேகத்தில் பயணிக்கின்றது. அத்துடன் ஒளி அலைகள் அதிர்வுகளையும், காந்த சக்தியையும் கொண்டது. அதன் கதிர்வீச்சுச் சக்தியானது அதன் அலைநீளத்தையும், அலைவரிசையையும் பொறுத்துள்ளது. நீண்ட அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றையானது குறைந்த அலைவரிசையையும், குறைவான சக்தியையும் கொண்டது.

  சூரிய ஒளியில் 7 வர்ணங்கள் இருப்பதை நாம் அறிவோம். அவற்றை நாம் வானவில் தோன்றும் போது காணலாம். அல்லது சூரிய ஒளியைமுக்கோண பட்டகத்தில் தெறிக்க வைத்து கண்டு கொள்ளலாம். இவற்றுள் வானவில்லில் ஒரு ஓரத்தில் சிவப்பும், ஓறேஞ் கலரும் இருக்கும். இதில் மஞ்சள், பச்சை, ஊதா போன்ற வர்ணங்கள் நடுவில் இருக்கும்.

  அந்த 7 வர்ணங்களும் வித்தியாசமான அலை நீளத்தையும், அலைத் அதிர்வையும் (துடிப்பையும்), அலை வரிசையையும் கொண்டது.   ஊதா மிகவும் குறைவான அலை நீளமுடையது. அதன் அர்த்தம் நீண்ட அலைவரிசையைக் கொண்டது. அதனால் இது உயர்ந்த அலைவரிசையையும் சக்தியையும் உடையது. சிகப்பு மிக நீளமான அலைவரிசையையும், குறைந்த சக்தியையும் உடையது.

  அதாவது சிவப்புநிற கதிரானது மற்றைய நிறகற்றைகளைவிட அதிக தூரம் செல்லக்கூடியது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது முதலில் எமது கண்களுக்கு புலப்படுவது சிவப்பு நிறக்கதிர்களே.

  அதனால்போலும், பெரிய வீதிகளில் காணப்படும் சமிஞை விளக்குகளில், “நில்” ஆபத்து எனகுறிப்பதற்கு சிவப்பு விளக்குகளும், ஆபத்தை விளைவிக்கக்கூடிய இடங்களிலும் சிவப்பு விளக்கும் பொருத்தப்பெற்று தூர வரும்போதே எல்லோருக்கும் தெரியக்கூடியதாக சிவப்பு நிறத்தில் சமிஞை மூலம் எச்சரிக்கை செய்யப்பெறுகின்றது.

  வாயுமண்டலத்தில்  ( ATMOSPHERE ) 78 % நைற்றஜின் வாயு, 21 % ஒக்சிஜின் வாயு, .93% ஆகன் வாயு, .03% காபனீர் ஒக்சைட்டு வாயுவும், மிகுதி நீராவியும், தூசி (மாசுத்துணிக்கைகளும்) காணப்படுகின்றன. அவற்றினூடாகவே ஒளி பூமியை வந்தடைகிறது .

  திண்மம், திரவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் (Molecules in Liquid, Solid or Gas) தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. இக் கூற்றை வெளிப்படுத்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த சேர்.சி.வி.ராமன் அவர்கள் 1930ம் வருடம்  பெளதிகத்திற்கான நோபெல் பரிசை பெற்றுக்கொண்டார்.

  சூரியனில் இருந்து வரும் ஒளிக்கற்றையானது வான்வெளியில் நேராக பயணிக்கின்றது.  அதன் பாதையில் தூசுகளோ அல்லது அணுத் துணிக்கைகளோ தடை செய்யும்போது அவை உட்கிரகிக்கப்படுகின்றன அல்லது வேறு திசைக்கு தெறிப்பு அடைகின்றன. இவற்றை வாயுக்களின் அணுமூலக்கூறுகள் சந்திக்கும்போது அவை உறுஞ்சப்பட்டு அழிக்கப்படுகின்றன அல்லது வேறு திசைக்கு வீசப்படுகின்றன.

  இவற்றில் குறைந்த அலைவரிசையைக் கொண்ட சிவப்பு கதிர்களிலும் பார்க்க  நீண்ட அலைவரிசை கொண்ட நீலகதிர்கள் அனேகமாக உறுஞ்சப் படுட்டு தெறிவடைகின்றன.

  ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும், பூமியிலிருந்து சுமார் 18 மைல் வரையில் பயணம் செய்யும்போது காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.) நீலக் கதிர் சிதறுவதை படத்தில் காணல்லாம்.

  அப்போது நாம் வானத்தைப் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி நீல நிறமாக தோற்றமளிக்க வேறு காரணம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை. வானம் நீலநிறமாக தெரிவதற்கு பூமியைச் சூழ்ந்துள்ள வழி மண்டலமே காரணம்.

  காலையிலும், மாலையிலும் அடிவானம் சிவப்பு நிறமாக தோற்றமளிக்க காரணம்?சூரியன் மத்தியான நேரத்தில் நாம் இருக்கும் இடத்திற்கு நேரே உள்ளது. அதன்போது ஒளியானது நேராக உள்ள (குறுகிய) வளிமண்டலப் பகுதியை கடந்து பூமிக்குள் வருகின்றது. ஆனால் காலையிலும், மாலையிலும் ஒளியானது நாம் இருக்கும் இடத்தை நீண்ட வளிமண்டம் ஊடாக வந்தடைகின்றது.

  அது எப்படியெனில், சூரியக் கதிர்கள் நேராக வருவதற்குப் பதிலாக சரிவாக நாம் இருக்கும் பகுதிக்குவந்து சேர்கின்றது. சரிவாக வருவதனால் வளிமண்டலப் பகுதியூடாக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய நேருகின்றது.

  அதனால் சிவப்பு நிறக் கதிர்களும் வாயு மண்டலத்தில் நீலக் கதிகளைப்போல் சிதறடிக்கப்பட்டு தெறிப்படைந்து அதன் கதிர்களும் வானத்தில் பரவுலின்றன. அதனால் அடிவானம் சிவப்பாக தோற்றமளிக்கின்றது. இதே நேரம் சூரியன் சுச்சமாக தோன்றும் இடங்களில் வானம் நீலமாக தெரியும்.
  பூமியின் அமைப்பு - அறிந்து கொள்வோம்

  இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:

  1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.

  2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.

  3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.

  4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29028 அடி உயரம்.

  5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.

  6. கடலில் மிகவும் ஆழம் கூடிய இடம் “மரியானா டிரெஞ்ச்” அதன் ஆழம் சுமார் ஆறே முக்கால் மைல். 35,808 அடி

  7. இப்போது நாம் காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொருக்கு போன்ற பகுதி. இந்தப் பொறுக்கு சுமார் 25 மைல் வரை தான் உள்ளது.

  8. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.

  9. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.

  10. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.

  11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.

  12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.

  13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.

  14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)

  15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும். (அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.)

  16. சந்திரம் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

  17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

  18. பூமியிலிருந்து சந்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறது.

  19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் நிலப்பரப்பு. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 வீதம் நீர் - கடல்கள். மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)

  உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள்

  மொழி என்பது நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், கலாசார எழுச்சி உணர்ச்சிகள், கருத்துக்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் ஊடகம் அல்லது கருவி எனலாம்.

  உலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகின் மொத்த சனத்தொகை 50 இலட்சம் முதல் 1 கோடி வரை இருந்த போது, அவர்களிடையே 12 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன என்பது மொழியியலாளர்களின் முடிவாகும்.

  உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.

  சீன மொழிகள்:முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
  சீன மொழி     பேசும் மக்கள் தொகை
  மந்தாரின் (Mandarin)     88.5 கோடி            வூ (Wu)     7.72 கோடி     10        யூ (Yue) (Cantonese)    6.62 கோடி            மின் நான் (Min Nan)    4.9 கோடி           ஜின்யூ (Jinyu)    4.5 கோடி       க்ஸியாங் (Xiang)    3.6 கோடி       ஹக்கா (Hakka)    3.4 கோடி         கான் (Gan)     2.06 கோடி

  இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.
  உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - எது?ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.

  ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.

  இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது.

  இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.

  திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?தெலுங்கு. இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர்.

  தமிழ்:சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, இலங்கை. மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது.

  மலையாளம் & கன்னடம்:மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.

  முதல் 20 மொழிகள்1.  மாண்ட்ரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்

  2.  ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்

  3.  ஆங்கிலம் – ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்

  4.  அராபி - மத்திய கிளக்கு நாடுகள்

  5.  வங்க மொழி – இந்தியா, வங்கதேசம் - 189+ மில்லியன்

  6.  ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்

  7.  போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்

  8.  ரஷ்ய மொழி – ரஷ்யா - 170+ மில்லியன்

  9.  ஜப்பானிய மொழி – ஜப்பான் - 128+ மில்லியன்

  10.  ஜேர்மன் – ஜேர்மனி - 125+ மில்லியன்

  11. பிறெஞ்சி - பிறான்ஸ் - 120+ மில்லியன்

  12. வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்

  13. ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்

  14. கொரிய மொழி – தென்லொரிய், வட கொரியா - 75+ மில்லியன்

  15. வியட்நாமிய மொழி – வியட்நாம் - 67+ மில்லியன்

  16. தெலுங்கு மொழி இந்துயா - 66+ மில்லியன்

  17. யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்

  18. மராட்டி மொழி – இந்தியா - 64+ மில்லியன்

  19. தமிழ் மொழி – இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா - 63+ மில்லியன்

  20. துருக்கி மொழி – துருக்கி - 59+ மில்லியன்

  வானம் பகலில் நீலமாக தோன்றுவதற்கான காரணம் - விஞ்ஞான விளக்கம்.
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சினிமா
இலக்கியம்
தொழில்நுட்பம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்