இந்திய அரசியலமைப்பு,சட்டம்,
 • இந்திய அரசியலமைப்பு,சட்டம்,

  இந்திய அரசியலமைப்பு*  இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது.

  *   தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்.

  *  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

  *   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.

  *   இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

  *   இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.

  *  பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.

  *  இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்.

  *  தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்.

  *   இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.

  *   இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது.

  *   மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.

  *  அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.

  *   நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன.

  *  இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

  *  இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

  *  அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன.

  *  அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

  *   இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை).

  *   நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

  *  நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.

  *  ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்.

  *   அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

  *  இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது.

  *  பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.


  இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்

  *  இங்கிலாந்து:

  1. சட்டமியற்றும் முறை:

  2. சட்டத்தின் பணி

  3. ஒற்றைக் குடியுரிமை

  4. பாராளுமன்ற முறை அரசாங்கம்

  5. கேபினட் முறை அரசாங்கம்

  6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்

  7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு

  8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்

  9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்

  *  அமெரிக்கா:

  1. சுதந்திரமான நீதித்துறை

  2. நீதிப்புனராய்வு

  3. அடிப்படை உரிமைகள்

  4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்

  5. நீதிபதிகளை நீக்கும் முறை

  *   குடியரசு முறை அரசாங்கம்

  அரசியலமைப்பின் முன்னுரை

  துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்

  அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்

  உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்

  அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்

  ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)

  ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்

  பலமான மத்திய அரசாங்கம்

  எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது

  *  ஜெர்மனி: நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது

  *   ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை

  *  ரஷ்யா: அடிப்படைக் கடமை கள்

  *  கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை

  *   தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை

  அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்

  *  முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

  *  இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

  *  அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும்.

  *  சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.

  *  அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது.


  இந்திய அரசியலமைப்பு முகவுரை

  *  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது.

  *  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.

  *  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

  *  இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.

  *  இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.

  *  1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.

  இந்திய அரசும் அதன் எல்லைகளும்

  *  இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.

  *  இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.

  *  புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2

  *  புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3

  *  புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4

  * இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

  *  இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.

  அடிப்படை உரிமைகள்

  *  இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.

  *  1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.

  *   1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

  *   2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)

  *  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):

  * ் 4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):

  *  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):

  *  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):

  ஐந்து வகையான நீதிப் பேராணைகள்:

  1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) :

  தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

  2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):

  ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.

  3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition):

  நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.

  4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):

  பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

  5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):

  நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.

  *  டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

  *  அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

  அடிப்படைக் கடமைகள்

  *  அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

  *  42-வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி ஒய லி ஆ (அங்கம் 51 ஆ)லி ல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.

  *  ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து இவை பெறப்பட்டன.

  மாநிலங்கள் அவை (Rajya Sabha)

  *  இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது.

  *  மாநிலங்கள் அவை 250-க்கு மிகாத உறுப் பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், மத்திய ஆட்சிப் பகுதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

  *  உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  *  மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது.

  *  மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

  *  மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும்.

  *  இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

  *  இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் தன்னு டைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

  *  ஒரு துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  *  துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்.

  மக்கள் அவை (Lok Sabha):

  *  மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது.

  *  525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  *  ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.

  *  மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும்.

  *  நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.

  *  தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

  *  மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  *  மக்கள் அவை ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும்.

  நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):

  *  சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.

  *  சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

  *  நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது.

  *  நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம்.

  *  சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது.

  நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :

  *  அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும்.

  *  இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார்.

  *  நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.

  கூட்டத் தொடர்கள் பின்வருமாறு:

  *  1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.

  *  2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.

  *  3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

  குடியரசுத் தலைவர்

  *  இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார்.

  *  இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

  *  இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

  *  இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார்.

  *  மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

  *  குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்

  *  ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

  *  குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.

  *  குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம்.

  *  குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும்.

  *  குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

  குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

  1. நிர்வாக அதிகாரங்கள்

  *  மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது.

  *  மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

  *  பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

  *  இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலை வர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

  2. சட்டமன்ற அதிகாரங்கள் :

  *   பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்.

  *  பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.

  *  மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம் அவருக்கு உண்டு.

  *   பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

  *  இவரது அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது.

  *  பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளது.

  3. நிதி தொடர்பான அதிகாரங்கள்

  *  நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்ய இயலாது.

  *  இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர்.

  *  இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

  4. நீதி தொடர்பான அதிகாரங்கள் :

  *  குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் குடியரசுத் தலைவர்.

  இந்திய அரசியலமைப்பு,சட்டம்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
வீடியோ
சட்டம்
 மரண அறித்தல்