சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும்,
 • சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும்,

  தொகுப்பு.மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich-Switzerland.மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன.  சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான வளர்ச்சிக்கும் சமுதாய நியதிகளும் கோட்பாடுகளும் உறுதுணையாக விளங்குவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.  இந்த நியதிகள் பன்னெடுங்காலமாகப் பலராலும் பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தியும் வந்திருக்கின்றன.  எனவே சமுதாயக் கட்டுப்கோப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதனவாகச் சட்டங்கள் உள்ளன.  அதுபோல் சர்வதேச அரசியல் நடைமுறைகளிலும் இத்தகைய நியதிகளும் சட்டங்களும் உருவாகின.

  “சர்வதேச அரங்கில் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டுடனும் தொடர்பில்லாமல் வாழ முடியாது.  தொடர்புகள் இருந்தால் தொல்லைகள், மோதல், முரண்பாடுகள் முளைப்பது இயற்கை.  இத்தகைய மோதல், முரண்பாடுகள் உலகையே சீர்குலைக்கின்றன.  “நாடுகள் பூசல்கள் ஒழித்து அமைதியாக வாழச் சில விதிகளைக் கடைப்பிடிக்கின்றன.  இவ்விதிகள் நாடுகளுக்கு நீதியை வழங்க வல்லன என்று கருதப்படுகின்றது.  இவ் விதிகளே சர்வதேசச் சட்ட விதிகள் எனப்படுகின்றன”.  

      ஒரு நாட்டிலுள்ள மக்களும், அமைப்புக்களும் நிறுவனங்களும் அந்நாட்டுச் சட்டத்திற்கும் நியதிகளுக்கும் உட்படுகின்றன.  அதேபோன்று சர்வதேசச் சட்டங்களுக்கு தேசிய அரசுகளும் பல்தேசிய நிறுவனங்களும் சர்வதேச விவகாரங்களில் ஈடுபடும் மனிதர்களும் உட்படத்தப்படுகின்றார்கள்.  ஆனால் பொதுவாக சர்வதேசச் சட்டங்கள் சர்வதேச அரசியலில் பங்குகொள்ளும் நாடுகளுக்கு உரித்தானவையாகும்.  ஆகவே இதனைச் சர்வதேசப் பொதுச் சட்டங்கள் என்றும்,சர்வதேச தனியார் சட்டங்கள் என்றும் வகைப்படுத்தினர்.

  இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து அவற்றிடையே தொடர்புமிருந்தால் சர்வதேசச் சட்டம் தேவைப்படுகின்றது.  கி.மு.400 இலேயே எகிப்துக்கும் சேடா (Cheta)  என்ற நாட்டுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை இருந்ததுக்குச் சான்றுகள் இருக்கின்றன.  அக்காலத்தில் போர்விதிகளே பெரிதும் இடம்பெற்று இருந்தன.

  திருக்குறளில் அரசியல் அமைச்சியல் என்ற பகுதிகளில் அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் கூறப்பட்டுள்ளன.  அர்த்தசாஸ்திரத்திலும் அரசன் மற்ற அரசர்களைப் பொறுத்து கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

  வழக்கத்திலிருக்கும் சர்வதேசச் சட்டம் கடந்த 400 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிடையே இருந்த பழக்க வழக்கங்களின் அடியாகப் பிறந்ததாகும்.  பல சட்ட நிபுணர்களும் விளக்க நூல்கள் எழுதி இதன் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார்கள்.

  இந்தவகையில் சர்வதேசச் சட்டத்திற்கான தொகுப்பு என்ற வகையில் 1492ஆம் ஆண்டிற்கும் 1546ஆம் ஆண்டிற்குமிடையில் வாழ்ந்த  1548 ஆம் ஆண்டுக்கும்  1617ஆம் ஆண்டுக்கு  ம் இடையில் வாழ்ந்த 

  (பிறான்சிஸ்கோ சோறிஸ் ) Francisco Suarez ஆகிய ஸ்பானிய சமயக் கோட்பாட்டாளர்கள் யுத்தம் காலனித்துவ உருவாக்கம் போன்றவற்றிற்கான சட்டத் தொகுப்புக்களை வெளியிட்டு இருந்தனர்.  இதேபோன்று 1552 – 1608 க்கும் இடையே வாழ்ந்த
  ஒப்பற்ற சட்டங்களிலுள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தார்.

  ஆயினும் 1583 ஆம் ஆண்டிற்கும் 1645ஆம் ஆண்டிற்கும் இடையில் வாழ்ந்த சர்வதேசச் சட்டத்தின் தந்தையான

  (ஹாகோ குரோலியஸ்)  வழங்கிய பங்களிப்பு முக்கியமானது ஆகும்.  1609ஆம் ஆண்டு Freedom of the sea   என்ற தலைப்பில் முதல் சர்வதேசச் சட்ட நூலினை வெளியிட்டு இருந்தார்.  1625ஆம் ஆண்டு (De Jure  belli ac pacis) “போர்க்கால அமைதிக்கால விதிகள்” என்ற நூலை வெளியிட்டு இருந்தார்.  சர்வதேசச் சட்டத்தின் பிற்கால வளர்ச்சிக்கு இந்த நூல் அடித்தளமாக அமைந்தது என்றால் மிகையாகாது.  குரோரியஸ் சர்வதேசச் சட்டத்தினை இயற்கைச் சட்டம், உடன்பாட்டுச் சட்டம் அல்லது நம்பிக்கைச் சட்டம் என இரண்டாகப் பிரிக்கின்றார்.  உடன்பாட்டுச் சட்டத்துக்கு உதாரணமாக மரபுரீதியான சட்டங்கள் வழக்காற்றுச் சட்டங்களைக் கூறிக்கொள்ள முடியும்.  


  இவரின் பின்னர் Emmerich De Vattel எமரிர் டி வற்ரெல்)

   

  என்பவர் Law of Nation என்ற நூலினை வெளியிட்டு இருந்தார்.  இந்நூலில் இவர் இயற்கைச் சட்டங்கள் இறைமையாளர்களையும் இன விவகாரங்களையும் தொடர்புபடுத்துவதாகக் கூறுகின்றார்.  இவரின் கருத்துக்கள் மற்றும் மொண்டஸ்யகியூ, ரூசோ போன்றவர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு முற்போக்கான பங்களிப்பினைச் செய்வதற்கு உதவியிருந்தன.  

  சர்வதேசச் சட்டமானது அரசுகளின் இறைமையினையும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் எடுத்துக் கூறுகின்றது.  எனவே சர்வதேசச் சட்டம் அரசுகளின் இறைமையின் நண்பன் எனக் கூறமுடியும். அரசுகளுக்கிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட உறவுமுறைகளைச் சர்வதேசச் சட்டம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் சர்வதேச அரசியல் நடத்தைகளுக்கான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
   சர்வதேசச் சட்டம் தொடர்பாகப் பல கருத்துக்களை சட்ட அறிஞர்கள் முன்வைத்துள்ளனர்.  அவை

      “நாடுகளிடையே எழும் உறவு முறைகளை நெறிப்படுத்தும் வழமை சார்ந்த உடன்படிக்கை வழியான விதிமுறைகளையே சர்வதேசச் சட்டம் “ என்றார் ஒப்பன் ஹெய்ம்.

      “சர்வதேசச் சட்டமானது “உலக முறைமைகளுக்கூடாக  மனித உறவுகளுக்கான சில விதிகளை தோற்றம் பெற வைக்கின்றது” என  

  Elleryc Stowell கூறுகின்றார்.  

   

       Philip C.Jessup  என்பார்

  1943 இல் “பொதுவாக அரசுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பிரயோகிக்கத்தக்க சட்டங்களே சர்வதேசச் சட்டமாகும் எனக் கூறியிருந்தார்.

      Prof  வென்விக் அவர்கள் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றார்.  “பொதுவாக நாடுகள் பலவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நாடுகளின் வெளித்தொடர்புகளில் நன்மை பயக்கக் கூடிய உரிமைகளும் இவற்றில் அடங்கும்.  நாடுகளின் உரிமைகள் மீறப்படும் போது பின்பற்றக்கூடிய வழிமுறைகளும் சர்வதேசச் சட்டங்களில் அடங்கும்”. என சர்வதேசச் சட்டத்தினை வரையறை தருகின்றார்.

      சுதந்த்திர நாடுகளிடையே நடப்பிலிருக்கும் விதிகளின் தொகுதி சர்வதேசச் சட்டம் எனப்படும்.  இதை நாடுகளின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிய விதிகள் என்றும் கூறலாம்.  இவ்விதிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1)    அனைத்துலக விதிகள்
  2)    பொதுவிதிகள்
  3)    பிரத்தியேக விதிகள்

  என மூன்றாக பிரிப்பதுண்டு.  இருப்பினும் இவைகளைப் பொதுவிதிகள். வட்டார விதிகள் (Regional rules)  என இருவகையாகப் பிரிப்பதே சிறந்ததாகும்.

   பொதுவாக எல்லா நாடுகளாலும் கடைப்டபிடிக்கப்படுபவை பொதுவிதிகள் (General rules)  எனப்படும்.  (உதாரணம்:  தூதராலய விதிகள்)  சில நாடுகளில் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கும் நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் விதிகள் வட்டார விதிகள் அல்லது பிரத்தியேக விதிகள் எனப்படும்.  உதாரணம் மன்றோ கோட்பாடு.  எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய விதிகள் அனைத்துலக விதிகள் எனபப்டும்.  உதாரணம்: ஐக்கிய நாடுகள் சபை சாசனம்.  இவற்றை அமைதிக்கால விதிகள்இ போர்க்கால விதிகள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பது உண்டு.  

  சர்வதேச அரசியலில் சட்டங்கள் வகிக்கும் நிலைபற்றி விரிவாக ஆராய்ந்த Prof:. ஜோக் சுவர்ஸன்பேர்ஜர்   அவர்கள் மூவகைச் சட்டங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றரர்.  

  1)    அதிகாரத்தினால் உயர்நிலையிலிருந்து தோன்றும் சட்டங்கள்.
  19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ வல்லரசுகள் தமது ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்கள் மீதும்இ நாடுகள் மீதும் ஒருவகையான சட்டங்களை உருவாக்கினர்.  இவை அவர்களின் உயர்நிலையிலிருந்து பிறப்பிக்கப்பட்டவையால்; மற்றவர்களால் மீறப்பட முடியாத நிலை.

  2)    தொடர்புபடுத்தலுக்கும் ஒன்றிணைப்பதற்குமான சட்டங்கள்.
  இவை தேவையின் அடிப்படையில் இனம்காணப்பட்ட சமூகங்களுக்கிடையில் உருவாகின்றன.


  3)    இவற்றிற்கு இடைப்பிட்ட நிலையில் அதாவது பெரும்பான்மையான சர்வதேசச் சட்டங்கள் பரஸ்பர நல்லுறவின் அடிப்படையில் உருவாகின்றன.
  இந்தவகையைச் சார்ந்தவைதான் ராஜதந்திர செயற்பாட்டில் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட வெளியுறவுச் சட்டங்கள்,அகதிகள் பற்றிய சட்டங்கள் குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டங்கள் என்பன.

   இவ்வகையில் சர்வதேசச் சட்டம் சட்டம் தானா? என்ற கேள்வி நாட்டிடைச் சட்டம் உருவாகிய காலம் தொட்டு இக்கேள்வி கேட்கப்பட்டு காலத்திற்குக் காலம் சூழ்நிலைக்கேற்ப பதிலும் இறுக்கப்பட்டு வந்துள்ளது.

   Hobbes. Pufendorf, Austin

  ஆகிய சட்ட மேதைகள் இவற்றைச் சட்டவிதிகளாகக் கருத இயலாது என்றனர்.  ஆஸ்டின் சர்வதேசச் சட்டவிதிகளை நாடுகளின் நடவடிக்கைகள் குறித்த “அறநெறிக் கருத்துக்களின் தொகுதி” எனக் கூறினார். Austin  சர்வதேசச் சட்டம் ஒரு வரம்பில்லா அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர் அல்லது அரசரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.  அதை அமுல் நடத்தும் அதிகாரம் பெற்ற வரும் இல்லை.  எனவே Austin கொள்கைப்படி சர்வதேசச் சட்டவிதிகள் சட்டம் ஆகாது என்றார்.  

   ஆனால் சட்டம் என்பதற்கு ஆஸ்டின் கொடுத்த விளக்கம் சரியானதல்ல என்று சரித்திரபூர்வ சட்டவியல் (Historical Juries Prudence)  நிரூபித்து விட்டது.  மேலும் சர்வதேசச் சட்ட விதிகளை எல்லா நாடுகளும் ஒத்துக்கொண்டு இருக்கின்றன.  சர்வதேச நீதிமன்றத்தின் விதித் தொகுதியில நீதிமன்றம் வழக்கொன்றை சர்வதேசச் சட்ட விதிகளுக்கு இணங்க விசாரித்து முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

  சர்வதேச சட்ட விதிகளை மீறிய நாடுகள் கூட அவ்விதிகள் சட்ட விதிகள் அல்ல என்று வாதாடியதுமில்லை.  கூறியதுமில்லை.  தமது நடவடிக்கை வேறொரு விதியின்படி சரியானது என்று நிரூபிக்க முயல்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.  மேலும் சர்வதேசச் சட்டத்தை அமுதல்படுத்தும் அதிகாரம் ஓரளவுக்கு  ஐக்கியநாடுகள் அமைப்புக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
  அந்தவகையில் நாட்டிடைச் சட்டத்தின் மூலங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.  

  1)    சர்வதேசப் பழக்க வழக்கங்கள்.
  2)    சர்வதேச உடன்படிக்கைகள்
  3)    நாகரிக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொது விதிகள்.
  4)    நீதிமன்ற முடிவுகள்.
  5)    சட்ட மேதைகள் சர்வதேச நீதிபதிகளின் கருத்துக்கள்.
  6)    சர்வதேசச் சம்மேளனங்கள் பிரகடனப்படுத்தும் தீர்மானங்கள்.
  பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மூலங்கள் உலக நீதிமன்றத்தைத் தோற்றுவித்துள்ள அமைப்பு சட்டத்திலும் (Statute of International court of Justice )  பிரிவு (38) இல் அங்கீகரிக்கப்பட்டது.  

   அதில் கூறுவதாவது உலக நீதிமன்றம் தன் முன் வரும் வழக்குகளைக் கீழ்க்கண்ட சட்ட மூலங்களில் காணப்படும் நாட்டிடைச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிரணயிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

  1)    உலக அரங்கில் நாடுகள் செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் (International Treaties)
   
  2)    நாடுகளுக்கிடையே சட்டத்தின் தன்மையைப் பெற்றுவிட்டதற்குச் சான்றாகச் சொல்லக் கூடிய உலக வழக்கங்கள்   (International costume as evidence of a general practice accepted as law


  3)    நாகரிகமடைந்த அரசியல் அமைப்புக்களுடன் விளங்கும் நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள பொதுவான சட்ட நெறிக் கொள்கைகள்.  (The general principles of Law recognized by civilized nations)

  4)    பல்வேறு நாட்டின் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற பெரும் அறிஞர்கள் ஆய்வுரைக் கருத்து விளக்கங்களையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் மேற்கூறிய மூலங்களுக்கு துணை மூலமாகக் கொண்டு சட்டவிதிகளை நிர்ணயிக்கப் பயன்படுத்தலாம். (Judicial decisions and the teachings of the most highly qualified publicists of the various countries as subsidiary means for the determination of rules of law)


  1)    சர்வதேச பழக்க வழக்கங்கள்
         
  நாட்டிடைச் சட்டம் நாடுகளின் பொது ஒப்புதலையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.  அந்தப் பொது ஒப்புதல் எக் காரணங்களால் நடைமுறைக்கு வந்ததோ அவையெல்லாம் சர்வதேசச் சட்டத்தின் மூலங்களாகும்.  எனவே நாட்டிடைச் சட்டத்தின் முதன்மையான மூலங்கள் இரண்டு ஒன்று நாடுகள் தங்கள் வெளிப்படையான ஒப்புதலைத் தெரிவித்து ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கை மற்றும் உட்கிடையான ஒப்புதலை (Implied consent) தெரிவித்துக் கொள்ளும் வகையில் சட்ட விதியை போன்றே நாடுகள் வழங்கிவரும் உலக வழக்கத்தைத் தாமும் நடைமுறையில் ஏற்று நடப்பது வழக்கு விதி எனப்படும்.  நாட்டிடைச் சட்டத்திற்கு மட்டுமன்றி பொதுவாக எல்லாச் சட்டங்களுக்கும் வழக்கு விதிகள் முதன்மையான மூலமாகும்.

  2)    உடன்படிக்கைகள் (Treaties)

  உடன்படிக்கைகள் இரண்டு வகைப்படும். 1)     சட்டங்களை உருவாக்கும் உடன்படிக்கை
  2)    நாடுகளிடையே கடப்பாட்டு ஒப்பந்தங்களுக்காகச் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை.

  சட்டத்தினை உருவாக்கும் உடன்படிக்கை 2 வகைப்படும்.  முதலாவது உலகு அனைத்திற்கும் பொருந்தக்கூடிய நாட்டிடைச் சட்டத்தைத் தோற்றுவிக்கும் உடன்படிக்கைகள்.  உதாரணம்: ஐக்கியநாடுகள் சாசனம்.  இரண்டாவது பொதுத்தன்மையுடன் கூடியதாகவோ பொதுவாக விதிகளை வெளிப்படுத்துவதாகவோ மட்டும் அமையும் உடன்படிக்கைகள்.  உதாரணம்: வடகடல் கண்டத்திட்டு வழக்கு (North Sea continental shelf  case)       இவ்வழக்கு 1969 இல் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

  கடப்பபாட்டு ஒப்பந்த உடன்படிக்கைகள் இவ்வகை உடன்படிக்கைகள் நாட்டிடைச் சட்ட நேரடி மூலங்களாகக் கருதப்படுவதில்லை.  இருந்தாலும் சிலவேளைகளில் அவை நாட்டிடைச் சட்டவிதிகளை உருவாக்க உதவுகின்றன.

  3)    நாகரிகமடைந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவிதிகள்
   
  இதற்கு உதாரணம் “சார்சாவ் பேக்டரி வழக்கு (ஊhழசணழற கயஉவழசல ஊயளந) இவ்வழக்கில் நாடுகளில் உள்நாட்டு சட்டத்தில் வழங்கிவரும் “மறுதீர்ப்புத் (Re & Judicatal) தடைக்கொள்கை செயற்படுத்தப்பட்டது.

  4)   சட்ட வல்லுனர்களினாலும் சர்வதேச நீதிபதிகளின் கருத்துக்கள்.
  நாட்டிடைச் சட்டம் ஒரு சில பெரும் சட்டச் சான்றோர்களின் சிந்தனைத் தெளிவின் தத்துவச் சாரமே ஆகும்.  இதற்கு உதாரணமாக  ஹியூகோ குரோரியஸ், விக்டோரியா, வேட்டல்,சாக்கே போன்ற பன்னாட்டுச் சட்ட வல்லுநர்களின் சட்டபாணியைக் கூறலாம்.  

  5)    பல்வேறுபட்ட நீதிமன்றங்கள் நியாயக் குழுக்களின் தீர்ப்புக்கள்

   உலக அரங்கில் செயல்படும் நீதி மாற்றங்களும் நியாயக் குழுக்களும் ஒன்றையொன்று பின்பற்றி தீர்ப்பை வழங்கும் வழக்கங்களைக் கொண்டிருப்பதால் அவை நாளடைவில் பன்னாட்டுச் சட்டத்தின் தன்மையைப் பெறலாம்.

  சர்வதேச சட்டங்கள் இவ்வாறு பல்வேறுபட்ட நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டாலும் அவற்றை அமுல் செய்வதில் இறுக்கமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.  முதலில் சர்வதேசச் சட்டங்கள் பெரும்பாலும் நாடுகளின் விருப்பில் இயற்றப்பட்டதால் அவற்றைப் பின்பற்றுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட நாடுகள் நாட்டம் கொண்டுள்ளன.  மேலும் சர்வதேச அபிப்பிராயத்திற்கு பயந்தும் பிற அரசுகளின் எதிர் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவும் சர்வதேச சட்டங்கள் பெருமளவுக்குப் பின்பற்றப்படுகின்றன.  இச் சட்டங்களை சர்வதேச நீதிமன்றம் நிர்வகித்து வருகின்றது.

  சர்வதேச சட்டமானது தன்னகத்தே சில குறைபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது.

  1)    சர்வதேச சட்டத்தின் முதல்குறை அதன் விதிகள்.  திட்டவட்டமாக வரையறுக்கப்படாமல் இருத்தல். ஒரு காலத்தில் பயன்பட்டது.  மற்றொரு காலத்தில் பயன்படுவதில்லை. பழையன கழித்து புதியன புகுத்த சர்வதேச அரங்கில் திட்டவட்டமான அமைப்பு இல்லை.  சர்வதேச சட்டவிதிகள்இ நாட்டு நடப்பாலும் சர்வதேச நீதிமன்ற முடிவுகளும் காலப்போக்கில் செப்பனிடப்பட வேண்டியவை.

  2)    சர்வதேச சட்டத்தை அமுல் நடத்தும் அமைப்ப பற்றியது.  வல்லரசுகள் சிற்றரசுகளால் வேறுபாடு இன்றி எடுத்த முடிவை நிலைநிறுத்தும் அதிகாரமும் வலிமையும் பொருந்திய அமைப்ப இருப்பதாகச் சொல்ல முடியாது.  

  3)    இஸ்லாமிய கலாசாரத்துக்கு எதிராகவும் வளர்முக நாடுகளை சுரண்டுவதற்கு ஏதுவாக சர்வதேசச் சட்டம் இருப்பதாகச் சிலரால் கூறப்படுகின்றது.

  போரை ஒழித்து அமைதியை நிலைநாட்ட மேற்சொன்ன குறைபாடுகளுக்கு பரிகாரம் தேடவேண்டும். மேலும் U.N.O.;கூட்டுப்பாதுகாப்புக் கொள்கையினை நிறுவன மயப்படத்தியதால் சர்வதேசச் சட்டங்களுக்கும் அதனை நிர்வகிக்கும் சர்வதேச நீதிமன்றத்துக்கும் உச்ச மதிப்பு ஏற்பட்டுள்ளது.  Prof. பிலிப்ஜேசுப் தனது “நாடுகளுக்கிடையிலான நவீன சட்டங்கள்” என்ற நூலில் சர்வதேசச் சட்டங்களை நிருவகிப்பதில் U.N.O.;மிகத் தீவிரமாக செயற்பட வேண்டும் என்றார்.  இதற்ன ஐ.நா.விற்கு ஒரே நிரந்தரமான காவல் படை இன்றியமையாததாகின்றது.  

   
  இன்றுள்ள நிலையில் பெரும்பாலும் பாதகமான விளைவுகளே ஏற்படுகின்றன.  வலுவுள்ள அரசுகள் சர்வதேச சட்டங்களை மீறும்போது வலுவற்ற நாடுகளுக்கு உதவ சர்வதேச சட்டங்களோ அன்றி அமைப்புக்களோ சக்தியற்று காணப்படுகின்றன.  எனவே சர்வதேசச் சட்டங்களை ஒருமுகப்படுத்துவதற்கும் அவற்றை நிருவகிப்பதற்கும் படிமுறை அமைப்பு முறையில் சர்வதேச நீதி மன்றங்களை அமைப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்.  இதற்கு ஐ.நா. அமைப்பு அதிகார அரசியல் நிலையிலிருந்து விடுபட்டு சர்வதேச சமூகத்திற்கு நீதி நியாயத்திற்கும் கட்டுப்பட்ட அமைப்பாக மாறுவதும் சர்வதேச அபிப்பிராயத்துக்கு மதிப்பளிப்பதும் இன்றியமையாததாகும்.  மேலும் புதிய நாட்டு அங்கீகாரத்தையும் சர்வதேச நீதிமன்றமே பரிசிலித்து வழங்க வேண்டும்.  சர்வதேச அரங்கில் நேர்மை நிலவ ஆவன செய்ய ஒரு சர்வதேசச் சட்டமன்றம் தேவை இதை விருப்பு வெறுப்பற்ற ஒரு சர்வதேசச் சட்ட குழுவுக்கு(International Law commission) விடலாம்.

   

  சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
வீடியோ
ஆன்மிகம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்