காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்ற ஈழத் தமிழர் _
 • காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்ற ஈழத் தமிழர் _

  டெல்லி காமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஈழத்தைச் சேர்ந்த பிரஷாந்த் செல்லத்துரை. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்.
   
  சர்வதேச அரங்கில் தமிழர்கள் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
     அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் ஈழம். இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக் கலவரம் பெரிதாக வெடித்த 1983ம் ஆண்டு அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம்.
  செல்லத்துரை ஆஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்குதிரை வீரன் என்று ஆஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லத்துரை சரியான உயரம். இதனால்தான் இந்தப் பெயரை வைத்துள்ளனராம் ஆஸ்திரேலிய சகாக்கள்.
  டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றள்ளார் செல்லத்துரை. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவில் செல்லத்துரை ஒரு சாதனையே படைத்துள்ளார்.
   


  24 வயதேயாகும் செல்லத்துரை ரேடியாலஜி மாணவர் ஆவார். ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது செல்லத்துரைக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி , கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம் கிடைத்ததாம்.
  செவ்வாய்க்கிழமை நடந்த குழுப் போட்டியில் செல்லத்துரை, ஜோசுவா ஜெபரிஸ், சாமுவேல் ஆப்போர்ட், லூக் விவடோவஸ்கி, தாமஸ் பிச்லர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. ஜிம்னாஸ்டிக்ஸில் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் காமன்வெல்த் தங்கம் இது.
  இதேபோல இன்னொரு தங்கத்தையும் வென்று இரட்டை தங்க நாயகனாக உயர்ந்துள்ளார் செல்லத்துரை.
  http://www.gymnastics.org.au/ga/bio.aspx?ID=62401761&PID=3249

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஜோதிடம்
தையல்
உலக செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink