சோனி ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்-
 • சோனி ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்-

  சோனி ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

  அமெரிக்காவில் நடந்த சோனி ஓபன் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

  இறுதிப் போட்டியில் நம்பர் 1 ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன் நேற்று மோதிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் தனது முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

  இரண்டாவது செட்டிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று மயாமி மாஸ்டர்ஸ் சோனி ஓபன் தொடரில் 4வது (2007, 2011, 2012, 2014) முறையாக சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றார்.

  நட்சத்திர வீரர் நடால் 2005 ல் பெடரர் , 2008ல் டேவிடென்கோ, 2011 மற்றும் 2014ல் ஜோகோவிச் என இறுதிப்போட்டியில் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை 4 முறை நழுவவிட்டுள்ளார்.

  மகளிர் இரட்டையர் பிரிவு:

  சோனி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சுவிஸ் நாட்டை சேர்ந்த அனுபவ வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ், ஜெர்மனி நாட்டை சேர்ந்த சேபைன் லிசிக்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

  இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எகடரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியுடன் மோதிய ஹிங்கிஸ் ஜோடி 4-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது.

  இரண்டாவது செட்டில் ஹிங்கிஸ் - லிசிக்கி இணை 6-4 என கைப்பற்றி 1-1 என சமநிலை ஏற்படுத்தியது. கடைசி செட்டில் அபாரமாக விளையாடிய ஹிங்கிஸ் ஜோடி 4-6, 6-4, 10-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
இலங்கை செய்தி
வீடியோ
தங்க நகை
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink