புதிர் எடுக்கும் தமிழர் பாரம்பரியத்தை இன்றும் பேணிவரும் கிராம மக்கள்!-
 • புதிர் எடுக்கும் தமிழர் பாரம்பரியத்தை இன்றும் பேணிவரும் கிராம மக்கள்!-

  புதிர் எடுக்கும் தமிழர் பாரம்பரியத்தை இன்றும் பேணிவரும் கிராம மக்கள்!

   சைவ தமிழ் பாரம்பரிய பண்பாட்டு முறைகளையும் வழிபாட்டு முறைகளையும் தமிழ் மக்கள் பலரும்  மறுந்து வரும் நிலையில் ஈழத்தில் சில கிராமங்களில் அந்த பண்பாட்டு முறைகளை இன்றும் பேணி வருகின்றனர்.

  தமிழ் மக்களின் பண்பாட்டியியலிலும், வழிபாட்டியிலும் முக்கிய இடத்தை வகிக்கும் உழவர்களின் முக்கிய நாளாக தைப்பூச நாள் திகழ்கிறது. அவர்கள் தங்கள் நெல் வயல்களில் விளைந்த நெல்லை எடுத்து வந்து பொங்கல் இடும் நாளாக தைப்பூச நாள் ஈழத்தில் உள்ள பல கிராமங்களில் வழக்கத்தில் இருந்து வந்தது. புதிரெடுக்கும் இந்த பண்பாட்டு முறையை பலரும் மறந்துள்ள போதிலும் மட்டக்களப்பு ஆலங்குளம் போன்ற கிராமங்களில் இன்றும் அந்த பாரம்பரிய முறை பேணப்பட்டு வருகிறது.

  மட்டக்களப்பு  ஆலங்குலம்  ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தை பூசம் திருநாளை முன்னிட்டு வாழைச்சேனை இந்து மகா சபையினரால் சைவப் பாரம்பரிய நிகழ்வான புதிர் எடுக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்து மகா சபைத் தலைவர் பெ.புண்ணியமுர்த்தி தலைமையில் புதிரெடுக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

  கிராமத்தில் உள்ள உழவர்கள் புதிர் வெட்டி வந்து, அதனை வைத்து பூசை செய்த பின், புது நெல்லை குற்றி புத்தரிசியில்  பொங்கல் இட்டனர். ஊர் கூடி பொங்கல் இட்டு அதை முருகனுக்கு படைத்து அனைவரும் பகிர்ந்துண்ணும் கிராமிய பண்பாடு மிக நேர்த்தியாக இடம்பெற்றதை அங்கு காணமுடிந்தது.

  அங்கு   சமய சொற்பொழிவுகள் மற்றும் விசேட பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
சினிமா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்