உலகின் அதிநவீன ஏகே -203 துப்பாக்கிகள் தயாரிக்கும் ஆலை,
  • உலகின் அதிநவீன ஏகே -203 துப்பாக்கிகள் தயாரிக்கும் ஆலை,


    ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கும் ஆலையை உத்தரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். 2014-ம் ஆண்டில் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்த பின்னர், பிரதமர் மோடி முதன்முறையாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதிக்கு இன்று சென்றார். அங்கு, 538 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

    உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி தயாரிக்கும் தளவாடத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரஷ்யாவுடன் கையெழுத்தான ஒப்பந்தப்படி அந்த தொழிற்சாலையில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தேவையான ஏழரை லட்சம் ஏ.கே. 203 ரக தாக்குதல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாராகும் இது ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை விட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமேதி தொகுதியில் வாக்குகளைக் கொண்டு மக்களிடையே தாம் பாகுபாடு பார்க்கவில்லை என்றார். இனிமேல் அமேதி என்பது அங்கு வந்த தலைவர்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படாமல் வளர்ச்சித்திட்டங்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். நக்சலைட்டுகள், பயங்கரவாதிகளையும் எதிர்த்து போராடும் நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஏகே 203 ரக துப்பாக்கி மிகப்பெரும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.  

    மேக் இன் அமேதி' என அறியப்படும் இந்த துப்பாக்கிகளானது, பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுடன் நடக்கும் மோதலில் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார். அமேதி தளவாடத் தொழிற்சாலையில் என்ன ஆயுதம் தயாரிப்பது என்றே தெரியாமல் முந்தைய அரசு இருந்ததாகவும், நமது வீரர்கள் புல்லட் புரூப் கவசமின்றி எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் மோடி சாடினார்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
ஆய்வுக் கட்டுரை
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort