அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு,
 • அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு,

  எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

  இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

  அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

  இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

  நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் வரும் திங்கட்கிழமை(பிப்.11) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
மங்கையர் மருத்துவம்
சரித்திரம்
தங்க நகை
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort