தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்,
 • தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்,

  விவசாயிகளுக்கு 2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழக அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் - அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது.

  இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் தேசங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக 577.46 கோடி ரூபாயும், வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக 401.50 கோடி ரூபாயும், மீனவர்களின் சேதமடைந்த படகுகளுக்காக 41.63 கோடி ரூபாய் உட்பட ஆக மொத்தம் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 2,361.41 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  குடிசைகள், தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் எப்.ஆர்.பி. படகுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தின் வரையறையைவிடக் கூடுதலாக இந்த அரசு கணிசமாக உயர்த்தி வழங்கியுள்ளது.

  மேலும் தற்போது நிலவிவரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடையின்றி குடிநீர் வழங்க இதுவரை 157 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  2019-2020-ம் ஆண்டிற்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிர் செய்தல் போன்ற நிரந்தர நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனியே ஒரு திட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் இதர மரத்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்காக, இதுவரை 230.09 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 லட்சம் ரூபாய் அலகுத் தொகை வீதம், 1,700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டச் செலவின் 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக் கொள்ளும்.

  மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ் நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மாநிலத்தில் பல்வேறு வேளாண் பருவநிலை மண்டலங்கள் உள்ளதால், ஏற்றுமதிக்கு பல்வகை வேளாண் பயிர் சாகுபடி ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை இந்த அரசு உணர்ந்துள்ளதால், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்கத்தில் ஒரு சிறப்பு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அலகினை இந்த அரசு ஏற்படுத்தும்.

  இயற்கை வேளாண்மை மற்றும் பிறதரச்சான்றிதழ் அளித்தல், விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.

  இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.

  2019-2020-ம் ஆண்டில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக 79.73 கோடி ரூபாய் செலவிடப்படும்.

  2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்காக 87.22 கோடி ரூபாய் உட்பட வேளாண்மைத் துறைக்கு 10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  பயிர்க் கடன்களை வழங்குவதற்கும், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மாநிலத்தில் வலுவான கூட்டுறவு அமைப்புகள் செயல்படுகின்றன. 2018- 2019-ம் ஆண்டில், பயிர்க் கடன் வழங்க 8 ஆயிரம் கோடி ருபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9.37 லட்சம் விவசாயிகளுக்கு 6,118 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

  உரிய காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்கள் மீதான அடமானக் கடனையும் வழங்குகின்றன.

  2019-2020-ம் ஆண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர்க் கடன்கள் மீதான வட்டித் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

  தமிழக பட்ஜெட்: தமிழக அரசு எதற்கு செலவு செய்கிறது? - எப்படி வருவாய் ஈட்டுகிறது,

  வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டில் தமிழக அரசுக்கு பல்வேறு வழிகளில் வரும் வருவாய் மற்றும் செய்யும் செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

  தவறவிடாதீர்

  தமிழக பட்ஜெட் 2019-20 சிறப்பம்சங்கள்: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
  இந்த ஆண்டு தேர்தல் என்பதால் மத்திய பட்ஜெட்டை போலவே தமிழக பட்ஜெட்டிலும் மக்களவை கவரும் திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என எதிபார்ப்பு எழுந்தது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் துணை முதல்வரும் நிதி யமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் , வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  பட்ஜெட் அறிவிப்பை வாசிக்கும் முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிதியமைச்சர் ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார். அவர் பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் வரும் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு மற்றும் வருவாய் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

  தமிழக பட்ஜெட் 2019- 2020

  வரும் நிதியாண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வருவாய்

  1) மாநில ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 96177.14 கோடி

  2) மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்படும் எக்சைஸ் வரி: ரூ. 7262.33 கோடி

  3) பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 13122.81 கோடி

  4) வாகனங்கள் விற்பனை, பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ. 6510.70 கோடி

  5) மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் பங்கு: ரூ. 30638.87 கோடி

  6) தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்குத் தொகை: ரூ. 25602.74 கோடி

  தமிழக அரசு எதற்கு செலவு செய்கிறது என்ற விவரங்களும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

  தமிழக அரசின் முக்கிய செலவுகள்:

  அனைத்து வகையான மானியங்களுக்கும் செலவு செய்யும் தொகை: ரூ. 82673.32 கோடி

  அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவு செய்யும் தொகை: ரூ. 55399.74

  அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக செலவு செய்யும் தொகை: ரூ. 29627.11 கோடி

  வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை: ரூ. 33226.27 கோடி

  அரசு நிறுவனங்கள் பராமரிப்புச் செலவு: ரூ. 11083.42 கோடி

  மொத்த வரவும் செலவும்

  தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடி

  தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி

  பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி

  2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும்.

  நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வழக்கமான பட்ஜெட் போல் இல்லாமல், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் புதிய அறிவிப்புகளும், வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

  மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
வினோத நிகழ்வுகள்
வீடியோ
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort