கொடநாடு எஸ்டேட்டில் எடப்பாடி கூறியதால் கொள்ளையில் ஈடுபட்டிருப்பார்,
 • கொடநாடு எஸ்டேட்டில் எடப்பாடி கூறியதால் கொள்ளையில் ஈடுபட்டிருப்பார்,

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதால், கொடநாடு எஸ்டேட்டில் என் தம்பி கனகராஜ் கொள்ளையில் ஈடுபட்டிருப்பார் என அவரது அண்ணன் தனபால் கூறினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடையவர், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ்.

  இவர், தலைவாசல் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் கனகராஜ், கேரளாவை சேர்ந்த கூலிப்படையினருடன் கொள்ளையில் ஈடுபட்டார் என தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்த கனகராஜின் அண்ணன் தனபால் நேற்று நிருபரிடம் கூறியதாவது:

  எனது தம்பி கனகராஜ், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த சரவணன் மூலமாக, ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். 2008 முதல் 2013 வரை கார் டிரைவராக இருந்தார். அடிக்கடி கொடநாட்டிற்கு செல்வார். இதனால், என் தம்பிக்கு செல்வாக்கு உயர்ந்தது. கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக, தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

  இது அனைத்தும் உண்மையாக தான் தெரிகிறது. எனது தம்பி கனகராஜ், கடந்த 2017 ஏப்ரல் 28ம்தேதி, சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கமுள்ள தலைவாசல் தனியார் பள்ளி அருகே விபத்தில் சிக்கி பலியானார். ஆனால், இது விபத்து இல்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. எனது தம்பி, எடப்பாடி பழனிசாமி சொல்லி கூலிப்படையை அழைத்து சென்று, கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை அடித்திருக்கலாம்.

   எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் கொள்ளை சம்பவம் நடந்திருக்காது. எனது தம்பியை இந்த கொள்ளைக்கு பயன்படுத்தியிருக்கலாம். இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது உண்மை. எனது தம்பி உயிரோடு இல்லை என்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். தெகல்கா முன்னாள் ஆசிரியரிடம் ஆதாரம் இருக்கிறது. இவரிடம் ஆதாரம் இருந்தால் சொல்ல வேண்டியது தானே?

  அதே நேரத்தில் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்ெபக்டராக இருந்த சுரேஷ்குமார் என்பவர், 2 ஆண்டுகளாக தொடர்ந்து என் தம்பியிடம் பேசி வந்தார். விபத்தில் சிக்கும் நாளில் கூட, என் தம்பியிடம் அவர் செல்போனில் பேசியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும். கொடநாடு எஸ்டேட் கொள்ளை, அதைத்தொடர்ந்து நடந்த சாவுகள் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும்.இவ்வாறு தனபால் கூறினார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
எம்மவர் நிகழ்வுகள்
சிறுவர் உலகம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort