முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் சிறைத் தண்டனை,
 • முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டுகள் சிறைத் தண்டனை,

  வில்பத்து காட்டுப் பகுதியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி அன்டனோவ் 32 ரக விமானத்தை வீழ்த்தி, 37 பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவருக்கு இன்று தலா 185 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  இவர்களுக்கு எதிராக 37 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதால், ஒரு குற்றத்திற்கு 5 வருடங்கள் என்ற கணக்கில் இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  தீர்ப்பை வழங்கிய வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன், குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டதால், தண்டனை காலம் முழுவதும் 5 ஆண்டுகளில் ஒரே தடவையில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
   
  குற்றம் சுமத்தப்பட்டுள்ள இவர்கள் ஏற்கனவே 8 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவன் என்ற இராசதுரை ஜெகன், சின்ன திலகன் என்ற நல்லாம் சிவலிங்கம் ஆகியோருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளின் ஏவுகணை படைப் பிரிவின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது.

  2000 ஆம் ஆண்டு மார்ச் 30 அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பறந்த அன்டனோவ் 32 விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. விமானத்தில் பயணித்த ரஷ்ய விமானி உட்பட பாதுகாப்பு படைகளை சேர்ந்த 37 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஆன்மிகம்
தையல்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort