சவுதி இளம்பெண்ணை அகதியாக அறிவித்த ஐ.நா,
  • சவுதி இளம்பெண்ணை அகதியாக அறிவித்த ஐ.நா,

    சவுதியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி,தாய்லாந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியஇளம்பெண், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வந்த நிலையில், அவரை அகதியாகஐநாஅறிவித்துள்ளது.

    சவுதி நாட்டை சேர்ந்த ரஹப் முஹம்மது அல்-கனன் என்றஇளம்பெண், தனதுவிருப்பமில்லாமல் கட்டாயதிருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சித்ததால், வீட்டை விட்டு ஓட முடிவெடுத்தார். குடும்பத்தோடுகுவைத்துக்கு சுற்றுலா வந்திருந்த போது, அங்கிருந்துதப்பி ஆஸ்திரேலியாவை நோக்கி பயணம் செய்தார். சவுதியில் ஆண்உறவினர் துணையில்லாமல் பெண்கள் பயணம் செய்ய முடியாதுஎன்பதால், குவைத் வரும்வரை அவர் காத்திருந்துள்ளார்.

    அல்-கனன்சென்ற விமானம், தாய்லாந்தில் தரையிறங்கிய பின், அவரை அங்குள்ள அதிகாரிகள் பிடித்து வைத்து,திரும்ப சவுதிக்குஅனுப்பமுயற்சித்ததாக கூறப்படுகிறது. தான் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டதாகவும், தன்னைதிருப்பி சவுதிக்கு அனுப்பினால், பெற்றோர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் அல்-கனன் சமூக வலைதளங்களில் உதவி கேட்டுமன்றாடினார்.இதை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில்ஆதரவு குவிந்தது.இதைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு அவரை திருப்பி அனுப்பமாட்டோம், என உறுதியளித்தது.பின்னர், அவர் ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும்தஞ்சம் கோரினார்.

    அவர் நிரந்தரமாக வர முயற்சிக்கிறார் என தெரிந்துகொண்டஆஸ்திரேலிய அரசு, அவரதுவிசாவை ரத்து செய்தது. அவர் அகதி என அறிவிக்கப்பட்டால், அவருக்குதஞ்சமளிப்பதுபற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அல்-கனனின்நிலை குறித்து பரிசீலித்த ஐநா, அவரை அகதியாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அல்-கனனுக்குதஞ்சம் வழங்கப்படலாம்என கூறப்படுகிறது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
மங்கையர் மருத்துவம்
சட்டம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்