ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்,
 • ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்,

  சென்னை: ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளித்த சிகிச்ைச குறித்து ஆணையம் அமைத்துள்ள மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்துள்ளனர் என்று  ஆணைய வழக்கறிஞர் முகமது ஜபரூல்லா கான் தாக்கல் செய்த பதில் மனுவால் சசிகலா மற்றும் அப்போலோ தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த ஆணையத்தின் சார்பில் அப்போலோ டாக்டர்கள், செவிலியர்கள், டெக்னீசியன் என 75க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவே இருந்து வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம், தவறாக வரும் மருத்துவ அறிக்கையால் மருத்துவமனையின் பெயர் கெடுவதாகவும், மருத்துவ வார்த்தைகள் தவறாக மொழி பெயர்ப்பு செய்வதாகவும் கூறி ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவ குழுவை அமைத்தால்தான் எங்கள் மருத்துவர்கள் கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று மனு தாக்கல் செய்தனர்.

  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது ஜபரூல்லா கான் நேற்று பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த அக்டோபர் மாதமே சென்னை மருத்துவக் கல்லூரி டீன் தலைமையில் நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழுவை அமைத்தார். அவர்கள், மருத்துவ ஆவணங்களை நவம்பர் வரை ஆய்வு செய்து முடித்து விட்டனர் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். ஆணைய விசாரணையை தள்ளி வைக்கலாம் அல்லது இழுத்தடிக்கலாம் என்று நினைத்திருந்தவர்களுக்கு ஆணைய வழக்கறிஞரின் மனு குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மருத்துவக்குழு அமைப்பது தொடர்பான அப்போலோ மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது ஆணைய வழக்கறிஞர் முகமது ஜபாரூல்லா கான், சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன், அப்போலோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா ஆகியோர் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

  இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது தரப்புக்கு தெரியாமல் எப்படி மருத்துவ குழு அமைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்கள். என்ன மாதிரியான ஆய்வுகள் மேற்கொண்டனர், அவர்கள் ஏன் விசாரணையின் போது வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கேள்விளை அப்போலோ, சசிகலா தரப்பு சரமாரி கேள்வி எழுப்பி எழுப்பினார்கள். இதற்கு ஆணைய வழக்கறிஞர் தரப்பில் அப்போலோ அறிக்கையை ஆய்வு செய்ய தான் இந்த குழு அமைக்கப்பட்டது.

  இந்த குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் தான் நாங்கள் கேள்வி எழுப்பி விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார். தொடர்ந்து, ராமமோகன்ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்க்க கோரி ஆணையம் தாக்கல் செய்த மனுவும், அப்போலோ சார்பில், விசாரணை நடக்கும் அறையின் வாசலில் ஒரு காவலரை நிறுத்தி செல்போன் எடுத்துச்செல்வதை தடுக்க வேண்டும், டாக்டர் மதன்குமார் தனது வாக்குமூலம் தவறாக பதிவு செய்யப்பட்டதை திருத்த வேண்டும் என்பது தொடர்பான தாக்கல் செய்த மனு மீதும் விசாரணை நடைபெற்றது.

  இதில் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் முகமது ஜபாருல்லாகான், சசிகலா வழக்கறிஞர், அப்ேபாலோ வழக்கறிஞர்கள் ஆகியோர் தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர். தொடர்ந்து மனுக்கள் மீது விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஒத்தி வைத்தார். இந்த மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

  மருத்துவக்குழுவில் இருந்தது யார் யார்?
  ஆறுமுகசாமி அமைத்துள்ள மருத்துவக்குழுவில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கார்டியோ தெரபிக் சிகிச்சை நிபுணர் நந்தக்குமார், டாக்டர் மரகதம், இன்ஸ்ட்டியூட் ஆப் கார்டியாலஜி எம்.நந்தகுமரன், இன்ஸ்ட்டியூட் ஆப் ரேடியோலாஜி ரவி, கார்டியோ தெரபி சிகிச்சை நிபுணர் சிவராமன் ஆகிய 5 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
இந்திய சட்டம்
மங்கையர் பகுதி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்