ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட் தடை,
 • ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட் தடை,

  சென்னை: வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

  பொங்கல் பரிசு

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

  வழக்கு

  இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தொடர்ந்த வழக்கில், ரூ. 1,000 ரொக்கம் பரிசு வழங்க அரசின் ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும். இதன் மூலம் அரசின் பணம் வீணடிக்கப்படுகிறது. தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. ரூ.1000 கொடுப்பதன் மூலம் நிதி நெருக்கடியை அதிகரிக்கும். இந்த தொகையை வைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம். கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல், பரிசு வழங்குவதை ஏற்க முடியாது எனக்கூறப்பட்டது.

  கேள்வி

  இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர் கூறுகையில், உள்கட்டமைப்பு வசதிகள், சாலை, பள்ளிகள் வசதிகளை மேம்படுத்தலாம். அதை விட்டுவிட்டு, இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஏன்? கொள்கை முடிவு எடுக்காமல் செயல்படுத்துவது ஏன்? அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனரா? வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரொக்கம் வழங்குவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், பணக்காரர்கள், வசதி படைத்தவர்களும் ரூ.1000 வாங்கி பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கு இந்த தொகையை வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? இது அரசுப்பணம். கட்சி பணம் அல்ல. கட்சி பணத்தை எடுத்து செலவு செய்தால் கோர்ட் கேள்வி கேட்காது. ஆனால், அரசு பணத்தை செலவு செய்தால், நிச்சயம் கேள்வி கேட்போம்.

  பொங்கல் பரிசாக வழங்கப்படும் ரூ.1000 அரசுப்பணம். புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல், பொங்கல் பரிசு வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்க தடையில்லை எனவும் நீதிபதிகள் கூறினர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இலக்கியம்
சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort