நமது உடலில் உள்ள எலும்பும் எகிப்திய அறிவியலும்,
 • நமது உடலில் உள்ள எலும்பும் எகிப்திய அறிவியலும்,

  நமது உடலில் எலும்புகள் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். இந்த பூமியில் எலும்புகள் கொண்ட உயிரினங்களின் எலும்புகளை நீக்கி விட்டால் தசையுடன் மட்டும் தரையில் விழுந்து கிடப்போம்.

  ஒவ்வொரு மனிதனுக்கும் எலும்புகள் மிக முக்கியமானவையாகவும். எலும்புகள் இல்லையென்றால் இங்கு எந்த உயிரினத்தாலும் எழுந்த நடக்கவே இயலாது. எலும்புகளுக்கும் பலவித அற்புதங்கள் ஒளிந்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக எகிப்திய அறிவியல் முதல் இறப்பு வரை எலும்புகள் வகிக்கும் முக்கிய பங்கு என்ன என்பதை இனி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

  நம் அனைவருக்கும் தெரியும் நமது உடலில் 206 எலும்புகள் உள்ளது என்பது. இவை ஒவ்வொன்றின் செயல்பாடும் அதி பயங்கரமானது என்பதே உண்மை. குழந்தையாக நாம் பிறந்தது முதல் வயோதிக பருவத்தை அடையும் வரையில் எலும்புகள் நம்மை காத்து கொள்கிறது.

  இயற்கையின் படைப்பில் எலும்புகள் இன்றும் ஆச்சரியத்திற்குரிய ஒன்றாக தான் அறிவியலால் பார்க்கப்படுகிறது. குரங்கு முதல் மனிதன் வரை... மனிதன் குரங்கில் இருந்து வந்தது முதலே இந்த எலும்புகள் அவனுக்கு உதவி கொண்டே இருக்கிறது. முதுகில் உள்ள எலும்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்தவுடன் தான் குரங்கு மனிதமனாக பரிணாமித்தது.

  நாம் குழந்தையாக பிறக்கும் போது நமது உடலில் 300 விதமான எலும்புகளின் கலவை இருந்தது. நாம் இறக்கும் போது நமது உடலில் வெறும் 206 எலும்புகளே இருக்குமாம். வினோத எலும்பு..! நமது உடலில் எல்லா வித எலும்புகளும் ஒன்றோடு ஒன்று இணைத்திருக்கும். ஆனால், ஒரு எலும்பை தவிர. அதுதான், hyoid என்கிற தொண்டை பகுதியில் இருக்க கூடிய எலும்பு. இந்த எலும்பு மற்ற எந்த எலும்புடனும் இணைந்திருக்காது. இது நமது நாக்கை தாங்கி பிடிக்க கூடிய எலும்பாம்.

  இன்று நாம் செய்கின்ற எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடி எகிப்தியர்கள் தான். அன்றே அவர்கள் கால் எலும்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 3000 வருடத்திற்கு முன்னரே இதில் இவர்கள் முன்னோடி என அறிவியல் பூர்வ ஆதாரங்களும் உள்ளதாம்.

  நமது உடலுக்கு வைட்டமின் 'N' எவ்வளவு அவசியம்னு தெரியுமா..? இது குறைந்தால் என்ன நடக்கும்..? எதில் அதிகம் உள்ளது..? நமது உடலில் எந்த உறுப்புகளில் அதிக எலும்புகள் உள்ளது என தெரியுமா..? அதற்கு விடை கை மற்றும் கால் தான். நமது கைகளில் 27 எலும்புகளும், கால்களில் 26 எலும்புகளும் உள்ளதாம். ஆக 2 கைகளையும், 2 கால்களையும் ஒன்று சேர்த்தால் மொத்தம் 106 எலும்புகள்.

  சுறாக்கள் தனது வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பற்கள் விழுந்து விடுமாம். 8 முதல் 10 நாட்களுக்குள் விழுந்த அந்த பற்கள் மீண்டும் முளைக்க தொடங்குமாம். கிட்டத்தட்ட 30,000 பற்கள் விழுந்து விழுந்து முளைக்குமாம். இது இயற்கையின் ஒரு ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது.

  நாம் நினைத்து கொண்டிருப்பது போன்று எலும்புகள் அவ்வளவு கடினமானவை கிடையாதாம். நமது உடலில் இருக்கும் எலும்புகள் வலுவான மற்றும் திடமான ஒன்று தான். என்றாலும் கடினமாவை இல்லை என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

  நமது பற்களின் எனாமல் தான் அதிக வலிமையுடையதாம். சிறிய எலும்பு நமது உடலிலே மிக சிறிய எலும்பு காதுகளுக்கு பின்னல் இருக்கும் எலும்புதான். Y வடிவத்தில் இருக்க கூடிய எலும்பு மற்ற எலும்புகளை காட்டிலும் சிறியவையாம். காது பகுதியில் இருக்க கூடிய ஹம்மர் மற்றும் அன்வில் என்கிற இரு எலும்புகளும் சேர்ந்து தான் சத்தத்தை கேட்கும் திறனை கொடுக்கிறது.

  பல எலும்பு சார்ந்த நோய்கள் இன்றளவு அதிகமாக இருக்கிறது. இவை இன்றைய கால கட்டத்தில் தோன்றியவை இல்லை என்பதே உண்மை. 120,000 வருடத்திற்கு முன்பிலிருந்தே எலும்புகள் சார்ந்த கட்டிகளும் புற்றுநோய்களும் இருக்கின்றனவாம். ஆரோக்கியத்திற்கு..! உங்களின் எலும்புகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். இதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்கள், ப்ரோக்கோலி, மீன், கீரை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
மரண அறிவித்தல்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்