-
இயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அழிந்து போகுமாம். அந்த ஆபத்தான காலகட்டத்தை எப்படி அந்நாடுகள் எதிர்கொள்ளும் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம்.
ஜெர்மனியில் உள்ளரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில் குழந்தைகளின் நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
.
மேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்கிறது அந்த ஆய்வு .
ஆபத்தான பட்டியல் உள்ள நாடுகளின் லிஸ்ட்:
நாடுகள் ஆபத்து பட்டியல்
1.வனுஅடூ – 50.28
2.டொங்கா – 29.42
3.பிலிப்பைன்ஸ் – 25.14
4.சாலமன் தீவுகள் – 23.29
5.கயானா – 23.23
6.பப்புவா நியூ கினியா – 20.88
7.குவாட்டமாலா – 20.60
8.புருனை – 18.82
9.வங்கதேசம் – 17.38
10.ஃபிஜி – 16.58
11.கோஸ்டா ரிகா – 16.56
12.கம்போடியா – 16.07
13.கிழக்கு திமொர் – 16.05
14.எல் சல்வடோர் – 15.95
15.கிரிபடி -15.42
உயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.தென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.ஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு “கத்தார்” தான் .
இயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.
“வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது” என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.
இதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.
“இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை” என்று அந்த ஆய்வு கூறுகிறது.
“பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது” என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2018-08-20 12:29:20 ]
-
[ 2018-08-20 12:07:51 ]
-
[ 2018-08-20 12:47:47 ]
-
[ 2013-11-08 15:52:20 ]
-
[ 0000-00-00 00:00:00 ]
-
[ 2018-12-24 18:41:48 ]
-
[ 2018-12-22 22:09:13 ]
-
[ 2018-12-12 04:03:08 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை