ரணில் மற்றும் பொன்சேகா அடுத்து கைது,
  • ரணில் மற்றும் பொன்சேகா அடுத்து கைது,

    ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் காவல்துறை மா அதிபர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோரை கைது செய்யுமாறு  சிங்கள ஜாதிக்க அமைப்பு   கோரிக்கை விடுத்துள்ளது.

    நாமல் குமாரவினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலேயே சிங்கள ஜாதிக்க அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் கையளித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் கொலை சதி விவகாரம் குறித்து ஊழலுக்கு எதிரான செயலணியின் பணிப்பாளர் நாமல் குமார, அம்பாறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

    இந்த பின்னணியிலேயே, நாமல் குமாரவினால் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்களை உடனடியாக கைதுசெய்து விசாரணைகளை நடாத்துமாறு சிங்கள ஜாதிக்க அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
சுவிஸ் செய்தி
சட்டம்
 மரண அறித்தல்