சென்டினல் தீவு ஆதிவாசிகளை நெருங்குவது சவாலான காரியம்,
 • சென்டினல் தீவு ஆதிவாசிகளை நெருங்குவது சவாலான காரியம்,


  கொலையுண்ட அமெரிக்கரின் உடலை மீட்க போராடும் பொலிஸார் வெளியுலக தொடர்பை விரும்பாத ஆதிவாசிகள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்' என்றும் 'நம்பிக்கையுடன் இருப்போம்' என்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் பிரதி பொலிஸ்மாஅதிபர் தீபேந்திர பதாக் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்காவைச் சேர்ந்தவர் ​ேஜான் ஆலன் சாவ் (வயது 26). இவர் கிறிஸ்தவ மத போதகர். இவர் அந்தமான் தீவு பகுதியிலுள்ள வெளியாட்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதற்குப் பிரசாரம் செய்யச் சென்றார்.

  இதற்காக 7 மீனவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து படகில் சென்று இறங்கினார். அப்போது அவரை திரும்பிச் செல்லுமாறு ஆதிவாசிகள் சைகை காண்பித்ததாகக் கூறப்படுகிறது.

  எனினும் அதை மதிக்காமல் ​ேஜான் ஆலன் ஆதிவாசிகளை நோக்கி முன்னோக்கிச் சென்றுள்ளார். உடனே அவர் மீது அம்பை எய்து கொன்று கடற்கரை மண்ணில் புதைத்து விட்டனர்.

  இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்குத் தெரிவித்தனர். இந்நிலையில் ​ேஜான் ஆலனின் உடலை மீட்க இந்திய அரசு போராடி வருகிறது. அவரது உடலை மீட்க பொலிஸார் அடங்கிய படகு அந்த தீவுகளுக்கு 400 மீற்றர் தொலைவில் நின்று கொண்டு பைனாகுலர் மூலம் பார்த்தது. அப்போது ​ேஜான் ஆலன் காணாமல் போன அதே இடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஆதிவாசிகள் நின்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்தமான் தீவுகளின் டி.ஜி.பியான தீபேந்திர பதாக் கூறுகையில் "வடக்கு சென்டினல் வழக்கை கையாள்வது சிரமமாக உள்ளது.

  மேலும் சவாலான காரியம் கூட. எனினும் உளவியல் நிபுணர்கள், மானுடவியலாளர், உள்ளூர்வாசிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருப்போம்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


  அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ​ேஜான் ஆலன் உடலை மீட்கச் சென்ற அதிகாரிகள் சென்டினேலீஸ் மக்களால் துரத்தப்பட்டுள்ளனர்.

  அந்தமானில் இருக்கும் மர்மத் தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும். இங்கு உள்ள சென்டினேலீஸ் மக்களுக்கு வெளியுலக மனிதர்களைப் பிடிக்காது.

  இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த தீவிற்கு சென்ற போது ​ேஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். ​ேஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் திகதி அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு துன்புறுத்தி கொலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் கொல்லப்பட்ட ​ேஜானின் உடல் இன்னும் அந்த தீவில்தான் உள்ளது. அந்த தீவின் கடற்கரையில் உடல் புதைக்கப்பட்டு இருக்கிறது.

  இவரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்பதால்,பொலிசார் அந்த உடலை மீட்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

  அவரது உடலை மீட்பதற்காக நேற்றுமுன்தினம் மாலை பொலிஸ் படை ஒன்று அந்த தீவிற்கு சென்றுள்ளது. இவர்கள் கையில் ஆயுதம் ஏந்தி இருந்தாலும் அதை மறைத்தபடி ஆதிவாசிகளை அணுகி இருக்கிறார்கள். ஆதிவாசிகளுக்கு 300 மீற்றர் தூரத்தில் இருக்கும் போது படகுகளை நிறுத்திவிட்டு, அந்த தீவின் கரையை நோட்டமிட்டுள்ளனர்.

  அப்போது, சென்டினேலீஸ் ஆதிவாசிகள், உள்ளே இருந்து வெளியே வந்து ​ேஜானை புதைத்த இடத்தில் நின்றுள்ளனர். அங்கு நின்று, பொலிசாரை கோபமாக பார்த்தனர். பொலிஸ் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் சென்டினேலீஸ் மக்கள் பொலிசாரை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். அதோடு பொலிசாரை நோக்கி அம்புகளை எய்து இருக்கிறார்கள். ஆனால் தூரத்தில் இருந்த காரணத்தால் இதில் எந்த பொலிசாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து பொலிசார் அங்கிருந்து வெளியே தப்பித்து வந்தனர். சென்டினேலீஸ் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
விளையாட்டு செய்தி
சாதனையாளர்கள்
சரித்திரம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort