தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் பிரித்தானியா,
 • தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் பிரித்தானியா,

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்படும் என பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

  தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரின் வலியுறுத்தலை அடுத்து, பிரித்தானிய அமைச்சர் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

  இதன்போது, ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

  குறித்த சந்திப்பை தொடர்ந்து இலங்கைக்கான பிரித்தானியாவின் அழுத்தங்கள் தொடரும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
தையல்
இலக்கியம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்