மனைவியின் கண்முன்னே கணவருக்கு ஏற்பட்ட துயரம்,
 • மனைவியின் கண்முன்னே கணவருக்கு ஏற்பட்ட துயரம்,

  மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் சுவிஸ் நாட்டவர் ஒருவர் மனைவி கண்முன்னே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  நிகரகுவாவில் தங்க வயலில் பணியாற்றும் சுவிஸ் நாட்டவரை கொள்ளை முயற்சியின்போது மர்ம நபர்கள் கடந்த ஞாயிறன்று மனைவியின் கண்முன்னே சுட்டுக் கொன்றுள்ளனர்.

  3 பேர் கொண்ட அந்த கும்பல் 58 வயதான சுவிஸ் நாட்டவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

  இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

  இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட நபரின் மனைவி காயமின்றி தப்பியதாகவும், அவரை பாதுகாப்பன இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர் அந்த மூவர் கும்பல் அங்கிருந்து தலைமறைவானதாகவும், ஆனால் துரிதமாக செயல்பட்ட பொலிசார் அடுத்த நாள் அவர்களை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  தாக்குதலில் ஈடுபட்ட மூவரில் இருவர் கொல்லப்பட்ட சுவிஸ் நாட்டவருடன் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

  இதில் ஒருவர் கொல்லப்பட்ட சுவிஸ் நாட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  வாக்குவாதம் மற்றும், கொலை தொடர்பான உண்மையான காரணம் உத்தியோகபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
எம்மவர் நிகழ்வுகள்
சிறுவர் உலகம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்