-
குட்கா ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அவரது உதவியாளருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராகவும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2016-08-11 00:36:03 ]
-
[ 2014-04-25 21:53:14 ]
-
[ 2013-09-06 21:15:18 ]
-
[ 2013-09-06 21:12:06 ]
-
[ 2016-08-19 16:15:22 ]
-
[ 2015-12-20 19:31:07 ]
-
[ 2014-05-27 07:57:46 ]
-
[ 2013-09-19 00:26:31 ]
-
[ 2018-08-20 12:29:20 ]
-
[ 2018-08-20 12:07:51 ]
-
[ 2017-11-25 22:20:08 ]
-
[ 2017-11-25 22:18:28 ]
-
[ 2017-10-05 19:14:53 ]
-
[ 2017-04-06 07:06:18 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை