சுவிஸில் 3 பிள்ளைகளின் தாயார் படுகொலை,
 • சுவிஸில் 3 பிள்ளைகளின் தாயார் படுகொலை,

  சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் பொலிசாரை அணுகிய இளைஞர் ஒருவர் தாம் கொலை செய்துள்ளதாக கூறி சரணடைந்துள்ளார்.

  குறித்த இளைஞரை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் Vaud மாகாண பொலிசாரை அணுகிய 27 வயது

  சுவிஸ் இளைஞர், தமது காதலியை கொலை செய்துள்ளதாக கூறி பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

  தகவலை அடுத்து அவர் கூறிய முகவரிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் இருந்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட 31 வயதான பெண் மூன்று பிள்ளைகளுக்கு தாயார் எனவும், குறித்த இளைஞரை காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

  தற்போது அந்த பெண்மணியின் பிள்ளைகள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சம்பவத்தின்போது அந்த குடியிருப்பில் அவரது பிள்ளைகள் மூவரும் இல்லை என கூறப்படுகிறது.

  இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிசார், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
சாதனையாளர்கள்
இலங்கை செய்தி
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்