சுவிட்சர்லாந் அகதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட முதியவர்,
 • சுவிட்சர்லாந் அகதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட முதியவர்,

  சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் மதரீதியான கருத்து மோதலால் முதியவரை அகதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

  கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸல் பூங்காவில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரேசில் நாட்டவரான இளைஞரை நாடுகடத்தவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த 22 வயது இளைஞர், போதை மருந்துக்கும் அடிமையானவர் என்பதால் இக்கட்டான நேரத்தில் உரிய முடிவை எடுக்க தவறியிருக்கலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

  கொல்லப்பட்ட 60 வயதான முதியவர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற மறுத்ததாலையே குறித்த இளைஞர் கத்தியால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

  கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த இளைஞர் பாஸல் மாகாண சிறையில் காவலர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

  மட்டுமின்றி குறித்த இளைஞர் மீது திருட்டு, பொருட்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

  வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகளை பிரேசில் நாட்டில் செலவிட்டுள்ள குறித்த இளைஞர் கடந்த 5 ஆண்டுகளாகவே சுவிட்சர்லாந்தில் உரிய அனுமதி இன்றி குடியிருந்து வருகிறார்.

  தாயாருடன் அதிக நெருக்கம் இல்லை என்பதால் இவர் தனியாக சுவிட்சர்லாந்துக்கு குடியேறியுள்ளார். இவரது தாயார் ஜேர்மனியில் குடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

  உளவியல் ரீதியாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் குறித்த இளைஞரை விடுவித்தால் மேலும் பல குற்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
உலக செய்தி
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்