சுவிஸ் பொலிசார் சாலையிலேயே பிரசவ வலி வந்த பெண்ணுக்கு செய்த உதவி,
 • சுவிஸ் பொலிசார் சாலையிலேயே பிரசவ வலி வந்த பெண்ணுக்கு செய்த உதவி,

  சுவிட்சர்லாந்தின் Schwyz பகுதியில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு பிரசவ வலி அதிகரிக்க, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது என உணர்ந்த அப்பெண்ணின் கணவர், காரை சாலையோரம் நிறுத்தினார்.

  குழந்தையின் தலை வெளிவரத்துவங்கி விட்டதால் எப்படியும் சில நிமிடங்களில் பிரசவம் ஆகி விடும் என்பதை உணர்ந்த அவர், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க, பிரசவம் பார்க்கும் தாதிகளுடன் ஆம்புலன்ஸ் வந்ததோடு கூடவே பொலிசாரும் வந்தனர்.

  உடனடியாக அந்த சாலையின் ஒரு பகுதியை போக்குவரத்துக்கு மூடிய பொலிசார், மற்ற வழிகளிலும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதித்து அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கினர்.

  சற்று நேரத்தில் அந்தப் பெண் ஒரு அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

  பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சினிமா
சரித்திரம்
 மரண அறித்தல்