பேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்,
 • பேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்,

  நம்மில் பலருக்கு பேய்கள்,ஆவிகள் என்றால் அதிக பயம் இருக்கும். இன்னும் பலருக்கு இது பற்றிய நம்பிக்கை ஒன்றும் இருப்பதில்லை.

  எனினும் பேய்கள் மற்றும் ஆவிகள் குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
  பேய்கள் எப்போதும் உறங்குவதே இல்ல. அது தனது மரணத்திற்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற வெறியுடன் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தான் பேயாக இருக்கின்றேன் என்பதை உணர்த்த எப்போதும், பேய்கள் பனிமூட்டங்களை அனுப்புகின்றன.

  பூனைகளுக்கு பேய்களையும்,ஆவிகளையும் இனங்காண முடியும் என கூறப்படுகின்றது. பூனைகள் அசையாமல் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் அதன் கண்களுக்கு ஒரு பேய் தென்படுகின்றது என்று அர்த்தம்.

  பேய்கள் கனவில் வந்து ஏதாவது கூறினால், நிச்சயம் அது நடக்கும். ஏனென்றால் பேய்களுக்கு எதிர்காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியும்.

  இறந்த பின்னர், அந்த உடலம் புதைக்கப்படுவதற்கு அல்லது எரிக்கப்படுவதற்கு முன்னர், நாம் அதை பற்றி பேசும் அனைத்து விடயங்களையும் அவை, அருகில் இருந்து கேட்கும் என்று கூறப்படுகின்றது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
தொழில் நுட்பம்
சரித்திரம்
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்