ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்,
 • ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்,

  ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.

  இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

  ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14-ந் தேதி  கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை.

  இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

  இதற்கு மத்தியில் நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்குகள் தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

  இதன் முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணை, அடுத்த மாதம், 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

  இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில்  ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

  சபாநாயகர் மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில்  அறிவிப்பு,
   
  இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

  நாடாளுமன்ற வளாகத்தில் தற்சமயம் நடை பெற்று வரும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

  இன்றைய தினம் மாத்திரம் பிரதமர் ஆசனத்தில் அமர மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வர்த்தமானிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

  இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

  இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  அதற்கமைய இன்றைய தினம் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சில சந்தர்ப்பங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  அதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதாக இந்த கூட்டத்தின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
தமிழகச் செய்திகள்
ஆன்மிகம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort