இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு விசாரணைக்கு 03 நீதிபதிகள் நியமிப்பு,
 • இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு விசாரணைக்கு 03 நீதிபதிகள் நியமிப்பு,

  பரபரப்பு செய்திகள்:நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  அதனடிப்படையில் குறித்த மனு பிரதம நீதியரசர்களான நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

  இம் மானுக்கள் மீதான விசாரணை இன்று பிற்பகல் 03 மணிக்கு நடைபெறும் என தெரியவந்துள்ளது.
   
  முன்னதாக இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக 10 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.


  பிரதமரின் முகம் பிடிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா சுமந்திரன் கேள்வி

  பிரதமரின் முகத்தை பார்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கெதிராக இன்று உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் 10இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அடிப்படை உரிமை மனுவினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
   
  ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை தொடர்பில் பல அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.

  இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இலங்கை உச்ச நீதிமன்றம் திக்.. திக். போலீஸ் உச்ச கட்ட பாதுகாப்பு

  பிரதான செய்திகள்:ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதி மன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மன்றிற்கு வருகைதந்த மஹிந்தவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை கேலி செய்த சம்பவத்தினாலேயே இவ்வாறான பதற்ற நிலை உருவாகியுள்ளது.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் உதயகம்மன்பில ஆகியோரை நீதிமன்ற வளாகத்தில் கூடிநின்ற பொது மக்கள் திருடன் திருடன் என்றும் தவளை என்றும் கூச்சல் போட்டு கேலி செய்தனர்.
   
  இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை கேலி செய்த மக்களை நோக்கி பதிலுக்கு சத்திமிட்டனர். இதன் காரணமாகவே நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  எவ்வாறாயினும் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

  இச்சம்பவத்தையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வாகனத்திலேறி நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
சினிமா
தங்க நகை
உலக சட்டம்
 மரண அறித்தல்