சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து குறித்து நண்பர்களை எச்சரித்ததால் சிக்கலில் சிக்கிய இளைஞர்,
 • சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து குறித்து நண்பர்களை எச்சரித்ததால் சிக்கலில் சிக்கிய இளைஞர்,

  சுவிட்சர்லாந்தில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சாலையோரம் காத்திருந்த ஒரு இளைஞர், நல்லது செய்வதாக நினைத்து தனது நண்பர்களை எச்சரிப்பதற்காக அனுப்பிய ஒரு தகவல் அவருக்கே பிரச்சினையாக முடிந்தது.

  சாலையோரம் காத்திருந்த 18 வயது இளைஞர் ஒருவர், சாலையில் வேகமாக வரும் வாகனங்களை பொலிசார் சோதனையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அதைக் குறித்து வாட்ஸ் அப்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டார்.

  சில மணி நேரத்திற்குள் அவருக்கு காவல் நிலையத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. காவல் நிலையம் சென்ற அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. வேக சோதனை குறித்து மக்களை எச்சரிப்பது சட்டப்படி குற்றம் என்று கூறிய பொலிசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

  இப்போதுதான் பணி உதவித்தொகை பெற ஆரம்பித்திருக்கும் அவருக்கு அந்த அபராதத்தொகை மிகப்பெரியது என்பதை உணர்ந்த அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.

  ஆனால் 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுவிஸ் சட்டப்படி வேக சோதனை குறித்து மக்களை எச்சரிப்பது குற்றம்.

  நல்லது செய்வதாக நினைத்து வாட்ஸ் அப் செய்தி அனுப்பிய அந்த இளைஞருக்கு 850 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படுள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் அவர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
சிறுவர் உலகம்
இந்திய சட்டம்
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்