எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு,
 • எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு,

  உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

  அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

  இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
   
  வடஅமெரிக்காவில் வாழும் பஞ்சாபிகள் சங்கம் மூலம் பெறப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சொந்த நாட்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு பயந்து இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைய வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

  30 முதல் 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை பெற்று தருவதாக போலி வாக்குறுதி அளிக்கும் சில தரகர்களின் மாயவலையில் விழும் இந்தியர்கள் இங்கு அடைக்கலம் தேடிவந்து குடியுரிமைத்துறை அதிகாரிகளிடன் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

  அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 2400 இந்தியர்கள்


  சட்டவிரோத குடியேற்றம் : அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 2400 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

  அமெரிக்காவில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றம் குறித்த  அடக்குமுறையில் பெரிய  பின்னடைவை  சந்தித்து வருகிறது. சட்டவிரோத குடியேற்றத்திற்காக அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். சுமார் 2,400 இந்தியர்கள் சட்டவிரோதமாக நாடு கடந்து செல்ல முயன்றபோது அமெரிக்க போலீசார்  தடுத்து சிறையில்  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  கைதிகளில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபில் இருந்து சென்றவர்கள் ஆவார்கள் , அவர்கள் இந்தியாவில் குற்றசெயல்களில் ஈடுபட்டுவிட்டு தண்டனையை  எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அமெரிக்காவில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

  வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் (NAPA) தலைவர் சத்னம் எஸ் சஹால் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் சிறையில் உள்ள கைதிகளில், பஞ்சாபில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது  அக்கறைக்குரிய விசயமாகும்.  பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனைகாக காத்திருப்பவர்கள் ஆவார்கள் என கூறி உள்ளார்.

  வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் வெளியிட்டு உள்ள தகவலில், அமெரிக்காவில் உள்ள 86 சிறைச்சாலைகளில் 2383 இந்தியர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தமிழகச் செய்திகள்
இலங்கை செய்தி
தங்க நகை
 மரண அறித்தல்