சுய நிர்ணய உரிமைக்கு எதிராக வாக்களித்த நியூ கலெடோனியா மக்கள்,
 • சுய நிர்ணய உரிமைக்கு எதிராக வாக்களித்த நியூ கலெடோனியா மக்கள்,

  பிரஞ்ச் பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலெடோனியா மக்கள் சுதந்திரத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.பிரான்ஸிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாக அரசமைக்கலாமா அல்லது பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாமா என்பதற்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 56.4 சதவீதம் பேர் பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாம் என்று வாக்களித்துள்ளனர். பிரிந்து சென்று தனி நாடு அமைக்கலாம் என்பதற்கு ஆதரவாக 43.6 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

  இந்த வாக்கெடுப்பில் 81 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 1988 ஆம் ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

  நம்பிக்கை

  இது பிரான்ஸ் குடியரசின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

  மேலும் அவர், "நான் எவ்வளவு பெருமையாக உணர்கிறேன் என்பதை உங்களிடம் சொல்ல வேண்டும். ஒரு வரலாற்று காலக்கட்டத்தை ஒன்றாக கடந்துள்ளோம்." என்று கூறி உள்ளார்.

  வாக்கெடுப்பு


  இந்த வாக்கெடுப்பு அமைதியாக நடந்த போதிலும், வாக்கெடுப்புக்கு பின்பு சில இடங்களில் அமைதியின்மை நிலவி உள்ளது.

  தலைநகர் நைவ்மியாவில் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. சில சாலைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

  இந்த நியூ கலெடோனியா பகுதியில் அதிகளவில் நிக்கல் கிடைக்கிறது. பசிபிக் பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பிரான்ஸால் நியூ கலெடோனியா பார்க்கப்படுகிறது.

  175,000 தகுதியான வாக்காளர்கள் கொண்ட இந்தத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. காலனித்துவம் முடிவுக்குவராத 17 பிரதேசங்களில் இதுவும் ஒன்று என்கிறது ஐ.நா.

  கிழக்கு ஆஸ்திரேலியா பகுதியில் அமைந்துள்ள நியூ கலெடோனியாவில் உள்ளூர் கானக்ஸின் மக்கள் தொகை 39.1 சதவிகிதம். ஐரோப்பிய இனத்தவரின் மக்கள் தொகை 27.1 சதவிகிதம். இவர்களும் பிரான்ஸுக்கு ஆதரவாகவே வாக்களித்து இருப்பர்.

  அரசியல் பார்வையாளர்கள் சில கானக்ஸ் மக்களும் பிரான்ஸுடன் இணைந்திருக்கவே விரும்பியதாக கூறுகிறார்கள்.

  இந்த தீவு ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர்களை பிரான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் அளிக்கிறது.

  கடந்த மே மாதம் இந்த பகுதிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் நியூ கலெடோனியா இல்லையென்றால் பிரான்ஸ் நாட்டின் அழகு குறையும் என்ற தொனியில் பேசி இருந்தார்.

  1853 ஆன் இந்த தீவை முதல்முதலாக சொந்தம் கொண்டாடியது பிரான்ஸ்.

  இந்த பகுதியை தண்டனை பிரதேசமாக வைத்திருந்தது. அதாவது குற்றவாளிகள் எப்ன கருதப்படுவோர் இந்த பிரதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.

  கடும் சண்டை

  1980ஆம் ஆண்டு பிரான்ஸ் படைக்கும் கனக்ஸுக்கும் கடும் சண்டை நடந்தது.

  கானக்ஸ் பிரிவினைவாதிகள் நான்கு பிரான்ஸ் காவற்படை வீரர்கள் மற்றும் கொன்று 23 பேரை பிணைகைதிகளாக பிடித்து வைத்ததை தொடர்ந்து இந்த சண்டை தொடங்கியது. இதில் 19 கானகஸ் மக்களும், 2 கானக்ஸ் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

  சுதந்திர நியூ கலெடோனியாவை எதிர்ப்போர் மற்றும் ஆதரிப்போர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் வன்முறையை கைவிட இருதரப்பும் ஒப்புக் கொண்டன. சுயநிர்ணய உரிமைக்கான தேர்தல் நடத்தவும் ஒப்புக் கொண்டன.

  அந்த உறுதியை தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைப்பெற்றது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
தமிழகச் செய்திகள்
மருத்துவம்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort