ஒரு கிலோ எடையுள்ள பச்சை நிற வைரம்,
 • ஒரு கிலோ எடையுள்ள பச்சை நிற வைரம்,

  ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள வைரச் சுரங்கத்தில் உலகின் மிகப்பெரிய பச்சை நிற வைரம் கிடைத்திருக்கிறது. 1 கிலோ 100 கிராம் எடையுள்ள இந்த வைரம் 5 ஆயிரத்து 655 கேரட் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இது மனித மூளையின் எடை அளவு இருக்கிறது.

  அக்டோபர் 2 ஆம் தேதி ஜாம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள காஜெம் என்ற உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கத்தில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. இந்த வைரம் நவம்பர் மாத இறுதியில் சிங்கப்பூரில் வைத்து ஏலம் விடப்படுகிறது. பிரிட்டனுக்கு சொந்தமான இந்த சுரங்க நிறுவனத்துக்கு விலையில் 75 சதவீதமும், ஜாம்பியா அரசுக்கு 25 சதவீதமும் பங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

  இந்த வைரம் விற்கும் விலையில் தனது பங்கு 10 சதவீதத்தை ஜாம்பியாவில் உள்ள இரண்டு சிங்கம் சரணாலயத்திற்கு கொடுப்பதாக சுரங்க நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வைரத்தின் பெயர் இன்கல்மு அல்லது சிங்கம் என்றே வைக்கப்பட்டுள்ளது.
   
  இதற்கு முன் 2010 ஆம் ஆண்டு இதைக்காட்டிலும் எடையும் மதிப்பும் கூடுதலான வைரம் இதே காஜெம் வைரச் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. அது 6 ஆயிரத்து 225 கேரட் மதிப்புள்ளது. அதற்கு இன்ஸோஃபு என்று பெயர் வைக்கப்பட்டது.

  ஆனால் உலகின் மிகப்பெரிய வைரம் என்பது 2001 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள வைரச்சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்டது. அதன் எடை 360 கிலோ ஆகும். பலமுறை திருடப்பட்ட இந்த வைரத்தின் மதிப்பு ஒருசமயம் 7கோடியே 50 லட்சம் டாலர்களாக இருந்தது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
இந்திய சட்டம்
தையல்
சரித்திரம்
 மரண அறித்தல்