ரூ.20 கோடி தரேன்.. எனக்கு ஆதரவு கொடு.. எம்பிக்களை அழைக்கும் ராஜபக்சே,
 • ரூ.20 கோடி தரேன்.. எனக்கு ஆதரவு கொடு.. எம்பிக்களை அழைக்கும் ராஜபக்சே,

  இலங்கையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்க உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான குதிரை பேரம் அங்கு நடந்து வருகிறது.

  இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்கள் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க காத்திருக்கிறார்கள்.

  [ஏகே-47லிருந்து வரும் குண்டு போல பொய் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் மீது மோடி விமர்சனம்!]

  நடக்க உள்ளது
   
  நடக்க உள்ளது
  இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததை அதிபர் திரும்பப்பெற்றுள்ளார். அன்று பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

  என்ன பலம் உள்ளது
   
  என்ன பலம் உள்ளது
  இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 6 இடங்களை கொண்டுள்ளது. ஈழ மக்கள் குடியரசு கட்சி 1 இடத்தை கொண்டுள்ளது.

  குதிரை பேரம்
   
  குதிரை பேரம்
  இந்த நிலையில் நாளை அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்க உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக கடுமையான குதிரை பேரம் அங்கு நடந்து வருகிறது. அங்கு யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் எம்பிக்களை தங்கள் பக்கம் இழுக்க கட்சிகள் கடுமையாக முயன்று வருகிறது.


  குற்றச்சாட்டு வைத்தார்
   

  குற்றச்சாட்டு வைத்தார்
  இந்த நிலையில்தான் இலங்கை எம்பி ரங்கா பந்த்ரா தனக்கு ராஜபக்சே 20 கோடி கொடுப்பதாக கூறினார் என்று கூறியுள்ளார். 20 கோடி கொடுக்கிறேன் எனக்கு ஆதரவு அளி என்று ராஜபக்சே கோரிக்கை வைத்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். எம்பி ரங்கா பந்த்ரா ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்.

  இன்னும் பலர்
   
  இன்னும் பலர்
  இதேபோல் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பலருக்கு ராஜபக்சே அழைப்பு விடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பி ஒருவர் ராஜபக்சவிற்கு ஆதரவு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
விளையாட்டு செய்தி
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort