சுவிஸின் எந்த மாகாணத்திலும் இனி இவர்கள் பணியாற்ற முடியாது: தடைக்கு உள்ளான 100 பேர்,
 • சுவிஸின் எந்த மாகாணத்திலும் இனி இவர்கள் பணியாற்ற முடியாது: தடைக்கு உள்ளான 100 பேர்,

  சுவிட்சர்லாந்தில் பாடசாலை ஆசிரியிர்கள் 95 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து பாடசாலை நிர்வாகம் உத்தரவு.

  சுவிட்சர்லாந்தில் பாடசாலை ஆசிரியிர்கள் 95 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து பாடசாலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  மாணாக்கர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக கூறி பரவலாக புகார் எழுந்துள்ளதை அடுத்தே இந்த தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுவிஸ் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

  தொடர்ந்து 8 மாதம் விசாரணை மேற்கொண்டு உறுதி செய்த பின்னரே இந்த 95 பேருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

  இது சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் மன நிலை கொண்டவர்கள் அல்லது மனநல பாதிப்பால் அவதிக்கு உள்ளானவர்களிடம் இருந்தும் காக்கும் பொருட்டே மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

  இந்த விவகாரத்தில் சிக்கி ஒரு மாகாணத்தில் தடை செய்யப்படுபவர்கள் சுவிஸின் எந்த மாகாணத்திலும் பணியாற்ற முடியாதபடியும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  சூரிச் மாகாணத்தில் செயல்படும் 16,000 ஆசிரியர்களில் சுமார் 32 பேர் வெளியிடப்பட்டுள்ள தடைப் பட்டியலில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

  மேலும் St Gallen மாகாணத்தில் 15 ஆசிரியர்கள் தடைக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று பெர்ன் (14) மற்றும் லுசெர்னே (11) பேர் என தகவல் வெளியாகியுள்ளது.

  தடை செய்யப்பட்ட 95 பேரில் 43 பேர் துவக்க கல்வி ஆசிரியர்கள் எனவும் 24 பேர் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

  குறித்த பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் பார்வைக்கு எந்த தகவலையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

  இருப்பினும் லுசெர்னே மற்றும் சூரிச்சில் தடைக்கு உள்ளானவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும், St Gallen மாகாணத்தில் இருவர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
ஜோதிடம்
தங்க நகை
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort