சீஸை சுவையூட்ட இசை: ஆராய்ச்சியில் சுவிஸ் பல்கலைக்கழகம்,
 • சீஸை சுவையூட்ட இசை: ஆராய்ச்சியில் சுவிஸ் பல்கலைக்கழகம்,

  கேட்பதற்கு இது ஒரு வேடிக்கையான செய்தியாக இருக்கலாம், ஆனால் உண்மையில் சீஸ் தயாரிக்கும் ஒருவர் சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்றின் உதவியுடன் சீஸை சுவையூட்ட இசையை பயன்படுத்தும் ஆராய்ச்சியில்." /

  கேட்பதற்கு இது ஒரு வேடிக்கையான செய்தியாக இருக்கலாம், ஆனால் உண்மையில் சீஸ் தயாரிக்கும் ஒருவர் சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்றின் உதவியுடன் சீஸை சுவையூட்ட இசையை பயன்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்.

  சுவிட்சர்லாந்தின் Burgdorf நகரைச் சேர்ந்த Beat Wampfler என்னும் சீஸ் தயாரிக்கும் நபர், இசை, Emmental சீஸ் என்னும் ஒருவகை சீஸின் சுவையை அதிகரிக்குமா என்று கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்.

  தனது சீஸ் சேமிக்கும் அறைகளில் ஒவ்வொரு சீஸ் பெட்டிக்கு கீழும் அவர் ஒரு சிறிய ஸ்பீக்கரை பொருத்தியுள்ளார்.

  செப்டம்பர் மாதம் முதலே அந்த அறையில் வைக்கப்பட்டிருக்கும் சீஸ் கட்டிகள் இசை வெள்ளத்தில் நனைந்து வருகின்றன.

  ஒலிகள், மனிதனால் கேட்க இயலாத ஓசைகள் மற்றும் இசை, திடப்பொருட்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கிறார் Wampfler.

  ஏற்கனவே பல அறிவியலாளர்கள் தாவரங்கள் மீது இசை ஏற்படுத்தும் தாக்கத்தை அறிய ஆராய்ச்சிகள் செய்ததும், பல தாய்மார்கள் வயிற்றிலிருக்கும் குழந்தைகள் கேட்பதற்காக இசையை இசைக்கச் செய்வதும் உலகத்தில் நடக்கும் ஒன்றுதான்.

  Bernஇலுள்ள கலைக்கான பல்கலைக்கழகம், Wampflerஇன் இந்த ஆராய்ச்சியில் உதவ முடிவெடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

  முதலில் எங்களுக்கு இந்த ஆராய்ச்சியைக் குறித்து சந்தேகம் இருந்தது என்றாலும், ஒலி திடப்பொருட்களின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் sonochemistry என்னும் ஒரு பிரிவு அறிவியலில் இருப்பதைக் கண்டறிந்தோம் என்று கூறுகிறார் பல்கலைக்கழகத்தின் இசைப்பிரிவின் இயக்குநரான Michael Harenberg.

  சீஸ் சுவைக்கும் வல்லுநர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு வரும் ஆண்டு மார்ச் மாதம் ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தமிழகச் செய்திகள்
ஜோதிடம்
தொழில் நுட்பம்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்